அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பூதகரமாக வெடித்து வரும் சூழலில் சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், ஒரு அறையில் பேச வேண்டிய 'ஒற்றைத் தலைமை' விவகாரத்தை அம்பலத்திற்கு கொண்டுவந்து பேசி விவாதம் ஆக்கியிருக்கிறார்கள்.






முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியால்தான் ஒற்றைத் தலைமை பிரச்சினை பெரிதானது. மீண்டும் அதிமுக ஆட்சியை நிலைநிறுத்த பணியாற்ற வேண்டுமே தவிர, தற்போது இந்த பிரச்சனை தேவையா..? என்று கேள்வி எழுப்பினார். 






நகமும் சதையுமாக உள்ள ஓபிஎஸ் இபிஎஸ்


ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி குரல் எழுப்பி வரும் நிலையில், ஓபிஎஸும், இபிஎஸும் கண்ணும் இமையும் போல நகமும் சதையும் போல ஒன்றாக இருப்பதாக பொன்னையன் முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 






”ஒற்றைத்தலைமை குறித்த கேள்வியே தேவையற்ற ஒன்று. அந்த முடிவை பொதுக்குழு முடிவு செய்யும். திட்டமிட்டப்படி பொதுக்குழு நடக்கும். பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை குறித்து பேச வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஜோசியம் சொல்ல முடியாது. ஓபிஎஸும், இபிஎஸும் கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல ஒன்றாகவே உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண