சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அந்த கடித்ததில், ”அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மனுக்களை நிராகரிக்க வேண்டும். 


அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும்படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும்” என்று அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


முன்னதாக, நேற்று அதிமுக சார்பில் நடந்த பொதுக்குழுவில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து முடிந்தது. இதனால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்பாடுவார் என்றும், அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.


தொடர்ச்சியாக, கழகத்திற்கு எதிராக சதி செயல்களில் ஈடுப்பட்ட ஓபிஎஸ் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி, பொருளாளர் பதவி பறிக்கப்பட்டதாகவும், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியானது.


இப்படி ஒரு புறம் அதிரடியாக ஓபிஎஸுக்கு எதிராக காய்கள் நகர, மறுபுறம் என்னை நீக்கியதாக சொன்ன இபிஎஸ் மற்றும் அவர்களை சார்ந்தவர்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். 


மேலும் படிக்க :Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!


நேற்று நடந்த கலவரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமைக்கழகம் சீல் வைக்கப்பட்டது. மேலும், இரு தரப்பு பிரிவால் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னம் முடக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஓபிஎஸ்தான் காரணம் என்று இபிஎஸ் தரப்பும், இபிஎஸ்தான் காரணம் என்று ஓபிஎஸ் தரப்பும் ஒருவரை மாற்றி மாற்றி குறை சொல்லிக்கொண்டு வருகின்றனர். 


எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பறிக்கும் அபாயம் :


ஓபிஎஸ் மீது கடும் கோபத்தில் உள்ள இபிஎஸ் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை பறிக்க எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளார். இதன் காரணமாக இபிஎஸ் அதிமுக சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதித்து முடிவெடுக்க இருக்கிறார். 


இதுகுறித்து இபிஎஸ் தரப்பில், அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்படும். தேவைப்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தாலே போதும். சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டால் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பறிபோய் விடும் என்று தெரிவிக்கப்பட்டது. 


அவ்வாறு ஓ.பன்னீர்செல்வத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டால், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்படும். ஏனென்றால் இவர்கள் 3 பேரும் இரட்டை சிலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள். இவர்களையும் அதிமுக உறுப்பினர்கள் என்றுதான் சபாநாயகர் முடிவு செய்வார். அதற்கேற்ப இவர்கள் 3 பேருக்கும் சட்டசபையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Viral Tweet: நானும் ஒரு சிங்கிள்டா கண்ணா.. சிங்கிள் பசங்க கேங்குக்கு ஆள் சேர்த்த கல்வி அமைச்சர்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண