உலக மக்கள்தொகை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தத் தினத்தன்று உலகத்தின் மக்கள் தொகை தொடர்பாக பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டன. ஐநா உலக மக்கள் தொகை தொடர்பாக அறிக்கை ஒன்றை நேற்று வெளியட்டது. அதில் 2023ஆம் ஆண்டு மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தி முதலிடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் நாகாலாந்து பாஜகவைச் சேர்ந்த கல்வி அமைச்சர் டெம்ஜேன் இம்னா அலாங் ஒரு ட்விட்டர் பதிவை செய்துள்ளார். அந்தப் பதிவில், “இந்த உலக மக்கள் தொகை தினத்தில் இந்திய இளைஞர்கள் அனைவரும் குழந்தைப்பேறு மற்றும் மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் என்னை போல் சிங்கிளாக இருந்து வலமான சமூதாயம் உருவாக உதவியாக இருங்கள். வாருங்கள் சிங்கிள் இயக்கத்தில் இணைய வாருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். 






அவரின் இந்த சிங்கிள் பதிவு பலரையும் கவர்ந்துள்ளது. பலரும் இதற்கு பதில் பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூவும் இதற்கு ஒரு பதில் பதிவை செய்துள்ளார். அதில், “நாகலாந்து கல்வி அமைச்சர் திருமணத்திற்கு எதிரானவர் அல்ல. அவர் தன்னுடைய சிங்கிள் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க மும்முரமாக உள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.


 






இவை தவிர பலரும் இந்த ட்வீட் தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த ட்வீட்டை 68 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். இதற்கு முன்பாக டெம்ஜென் சிறிய கண்கள் தொடர்பாக ஒரு பதிவு செய்து மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பின்னர் தற்போது சிங்கிள் தொடர்பாக ட்வீட் செய்து பிரபலம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண