அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் பேராதரவுடன் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ய சிறப்பு பிரார்த்தனை செய்வதற்காக, அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் காஞ்சிபுரத்தில் உள்ள தர்காவிற்கு வருகை தந்தார்.
சென்னையை அடுத்த வானகரத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் , பொதுக் குழுக் கூட்டமானது நடைபெற்றது. இதில், அதிமுகவின் தற்காலிக அவை தலைவராக இருந்த, தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஹஜரத் சையத் ஷா அமீத் அவுலியா தர்காவில் சிறப்பு துவா செய்வதற்காக அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் வருகை தந்து சிறப்பு தொழுகை செய்தார்.
காஞ்சிபுரம் அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்ட தலைவருமான சோமசுந்தரம் தலைமையில் பேண்ட் வாத்தியங்களுடன் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தர்கா உள்ளே சென்று வருகிற 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு மக்கள் பேராதரவுடன் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ய சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்மகன் உசேன்,
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் பேராதரவோடு வர வேண்டி பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஹஜரத் சையத் ஷா அமீத் அவுலியா தர்காவில் சிறப்பு துவா செய்ததாக தெரிவித்த அவர், மேலும் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்கூட்டத்தில் பொதுக்குழு ஒப்புதலோடு எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக வர வேண்டி பொதுக்குழு அமைய வேண்டும் எனப் பிரார்த்தித்ததாக அவர் கூறினார். தொண்டர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதாக தெரிவித்தார். எல்லாவல்ல இறைவன் நல்லது செய்ய வேண்டும் நாடு போற்ற வேண்டும் அதிமுகவின் ஒற்றுமை தேவை அதனை நிலைநாட்ட வேண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செய்வோம் என்பது உறுதி என்றார்.
அதிமுக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூ ர் முன்னாள் எம்.எல்.ஏ மதனந்தபுரம் கே.பழனி, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், வி.ஆர்.மணிவண்ணன், தும்பவனம் டி.ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜூ,திளக்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்