தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தொடங்கியுள்ளது. ஏற்கனவே திமுக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவர் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில் நேற்று இரவு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.




அதன்படி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் என இரு தலைவர்கள் இருப்பதால், தலா ஒருவருக்கு ஒருவரை தேர்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டு, அதன் படி இபிஎஸ் தேர்வாக சி.வி.சண்முகமும், ஓபிஎஸ் தேர்வாக தர்மரும் தேர்வாகினர்.




வன்னியர் மற்றும் தேவர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், இந்த வியூகம் வகுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இருவரும் இன்று சென்னை வந்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் சந்திக்க தர்மர், அவருக்கு பொன்னாடை போர்த்தி, மலர் கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதே போல, மற்றொரு வேட்பாளரான சி.வி.சண்முகமும் ஓபிஎஸ்.,யை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 




முன்னாள் முதல்வரும், அதிமுக எதிர்கட்சி தலைவருமான இபிஎஸ்.,யை அவரது இல்லத்தில் சந்தித்த சி.வி.சண்முகம், அவருக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதே போல், மற்றொரு வேட்பாளரான தர்மரும், இபிஎஸ்.,யை சந்தித்து வாழ்த்து பெற்றார். இரு தலைவர்களின் சாய்ஸ் என்றாலும், இருவரும் பரஸ்பரம், இரு தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 




கட்சி அறிவுறுத்திய தேதியில் அவர்கள் இருவரும் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர். அதன் பின் போட்டியின்றி அவர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது. இரு எம்.பி.,களை தேர்வு செய்வதற்கு தேவையான போதிய எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அதிமுகவிற்கு இருப்பதால், எந்த சிக்கலும் இன்றி , அவர்கள் இருவரும் எம்.பி.,யாக தேர்வாக உள்ளனர். 


தர்மர் தேர்வு செய்யப்பட்டது எப்படி? அவரை ஓபிஎஸ் டிக் செய்தது ஏன்? கீழே வீடியோவில் உள்ளது: 


 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண