பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத் வரும் நிலையில், அவருடனான சந்திப்பை தவிர்க்கும் விதத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று காலையே பெங்களூரு புறப்பட்டுச் சென்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 4 மாதங்களில் 2ஆவது முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பாஜக இடையே அரசியல் யுத்தம் நடந்துவரும் சூழலில், இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத் வந்தார். இந்த நிலையில், அவருடனான சந்திப்பைத் தவிர்க்கும் விதத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று காலையே பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். அங்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா குடும்பத்தினரைச் சந்தித்து,
முதல்வர் சந்திரசேகர ராவ் பேசுகிறார். தற்கால தேசிய அரசியல் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரை வரவேற்ற அமைச்சர்
இந்த சூழலில் ஹைதராபாத் வந்த பிரதமர் மோடியை, தெலங்கானா கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் வரவேற்றார்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை
ஜப்பானில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று நாடு திரும்பிய பிரதமர் மோடி இன்று (மே 26ஆம் தேதி) தெலங்கானா சென்றார். பேகம்பேட் விமான நிலையம் வழியாக வந்த பிரதமர் மோடி, தெலங்கானா அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
ஐதராபாத் சென்ற அவர் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ISB) கல்வி நிறுவனத்தின் 20வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதோடு, முதுநிலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றுகிறார்.
தமிழ்நாடு வரும் பிரதமர்
இதைத் தொடர்ந்து சென்னை வர உள்ளார் பிரதமர் மோடி. இன்று மாலை நேரு விளையாட்டு அரங்கில் 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இதில், 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான 5 நிறைவடைந்த திட்டங்களைத் திறந்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 28 ஆயிரத்து 500 கோடி ரூபாயிலான மற்ற 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் பிரதமர், வந்த வேகத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று இரவே, தலைநகர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
முன்னதாகத் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவை, நடிகர் விஜய் அண்மையில் சந்தித்துப் பேசினார். நடிகர் விஜய் தன்னுடைய 66ஆவது படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்தபோது இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியையும் நடிகர் விஜய் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்