அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தனது மகனுமாகிய ரவீந்தரநாத்தை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. மேலும், கட்சி சட்டவிதிகளின்படி எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்புகள் செல்லாது எனவும் ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார். 


அப்போது உடன் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் உண்மையான அதிமுக நாங்கள் தான் அவர்கள் எங்களை நீக்கியது செல்லாது என  தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை நீக்கிய விவகாரத்தால் அதிமுகவில் உட்கட்சி உரசல் அதிகமாகிக்கொண்டே வருகிறது.  


அதிமுக உள்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், கட்சியில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 18 பேரை நீக்கம் செய்து ஈபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மிகுந்த பரபரப்புக்கிடையே, கடந்த 11 ஆம் நடந்த அதிமுக பொதுக்குழு இராண்டாவதாக கூடிய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டி இருந்த அதிமுக அலுவகத்தை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், அவர்களுக்குமிடையே மோதல் உண்டானது. இந்த மோதல் கலவரமாக வெடித்தது.  




இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, காவல்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வருவாய் துறை மூலம் சட்டப்பிரிவு 145 பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை சீல் வைத்து மூடியது. அன்று நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈபிஎஸ் ஓபிஎஸை  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து பேட்டியளித்த ஓபிஎஸ் ஈபிஎஸை தான் கட்சியில் இருந்து நீக்குவதாக பேட்டியளித்தார். 


இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களான ஓபிஎஸ் மகன்களான தேனி பாராளுமன்ற எம்.பி ரவீந்தரநாத், ஜெய்பிரதீப், வெல்லமண்டி நடராஜன்,  முன்னாள் அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், ஓபிஎஸின் தீவிர ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதா ஆதரவாளராக இருந்த அஞ்சுலட்சுமி, சைதை எம்.எம். பாபு, கோவை செல்வராஜ், வெங்கட்ராமன், கோபாலக்கிருஷ்ணன், எஸ். எ. அசோகன், ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட 18 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவித்தார்.  


இதனைத்தொடர்ந்து தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பி. தங்கமணி, ஜெயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா, ஜக்கையன் உள்ளிட்ட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண