சேலம் மாவட்டம் ஓமலூர் தாரமங்கலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது, அதிமுக பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம். நரேந்திர மோடியா? ராகுல் காந்தியா? என்றுதான் மக்கள் ஓட்டு அளித்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் சிறிய கூட்டணி அமைத்திருந்தாலும் அதிகளவு வாக்குகள் பெற்றிருந்தோம். யாரும் கவலைப்பட வேண்டாம் 2026 இல் அதிமுக ஆட்சி அமையும். அதிமுகவை எந்த கொம்பனாலும் வெற்றி பெற முடியாது என்றார்.



திமுக ஆட்சியை மூன்றரை முடித்துவிட்டது எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வந்தார்களா? என்ற கேள்வி எழுப்பினர். தமிழகத்தின் அனைத்து மக்களின் குரல். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் முடிவு செய்துவிட்டார்கள். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் வேறு வேறு. சட்டமன்ற தேர்தல் வந்தால் மக்கள் அதிமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள். தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். நமக்கிடையே உள்ள சின்ன சின்ன பிரச்சினைகள் வந்தால் அதை கலைந்துவிட வேண்டும். நமக்கு அதிமுக தான் சொந்தம். திமுகவை வீழ்த்த வேண்டும். அதற்கு மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நம்முடைய பங்கு என்ன என்று தான் யோசிக்க வேண்டும். அதிமுக நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை முக்கியம். அதிமுகவிற்கு ஓட்டு போட மக்கள் நமக்கு முடிவு செய்துவிட்டார்கள். அதிமுக நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் என்றார். 



மக்கள் நமக்கு ஓட்டுபோடாமல் யாருக்கு போடுவார்கள் என்று எண்ணத்தில் இருப்போம். திமுக விஷமதனமாக இருப்பார்கள். ஒவ்வொரு வீட்டுக்காக சென்று ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுத்துள்ளோம். நீங்கள் திமுகவிற்கு வாக்களிக்கவிட்டால் நிறுத்தபட்டுவிடும் என்றும் வாக்கு சேகரிப்பார்கள். திமுக கொடுக்கும் மகளிர் உரிமை தொகை பாதி பேர்களுக்கு தான் கொடுக்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பாகவே பொங்கல் பரிசு தொகையாக 2000 ரூபாய் எனப்படும் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தால். அதைவிட அதிகமாக பணம் கொடுப்பார்கள் என்று வாக்கு சேகரிக்க வேண்டும். திமுக விஷமதனமாக பிரச்சாரம் செய்வார்கள் நாம் உஷாராக இருக்க வேண்டும். நமது கட்சியில் உள்ள நிர்வாகிகளின் உறவினர்கள் வேறு கட்சியிலிருந்தால் அதிமுகவிற்கு கொண்டு வந்துவிடுங்கள். நிறைய குடும்பங்களில் இளைஞர்கள் உள்ளார்கள். அவர்கள் மூலம் அதிமுகவின் சிறப்பு திட்டங்களை வீடியோவாக பதிவு செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார்.