அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக இராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் இன்று உச்சத்தை தொட்டது. ஸ்ரீ வாரு மண்டபத்தில் பொதுக்குழு நடக்க, அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து எடப்பாடி ஆதரவாளர்களுக்கு அவர்களுக்கு மோதல் வெடித்தது. தொடர்ந்து பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் அலுவலக மோதல் தொடர்பாக, கலவரம் செய்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, அனுமதி இல்லாமல் கூடுதல், உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  






முன்னதாக, அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் அதன் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், அதிமுகவின் பொதுச்செயலளாராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து ஓபிஎஸ்ஸிடம் கேட்டபோது, ஈபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். தொடர்ந்து 145 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.      


தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் தமிழ்மகன் உசைன், கேபி. முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர