திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமங்களை நோக்கிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, திருத்தணி தொகுதியில் 60 இடங்களை தேர்ந்தெடுத்து அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாமக கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 



பயணத்தின் போது திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், முருகம்பட்டு கிராமத்தில் கொடியேற்ற பாமக தலைவர்  அன்புமணி இராமதாஸ்  சென்றார். அப்போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த பகுதியில் உள்ள  அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க அழைத்தார். இளைஞரின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்ட அன்புமணி, அதே வேகத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 



மாலை அணிவிக்க சென்ற அன்புமணிக்கு, அந்த சிலை சுவாரசியமான தகவல் ஒன்றை காட்டியது. அச்சிலையை முருகம்பட்டு கிராமத்தில் தலித் மக்கள் முன்னணியின் நிறுவனத் தலைவர், மறைந்த தங்கவயல் வாணிதாசன் முன்னிலையில், திறந்துவைத்தது,  பாமகவின்  பொதுச்செயலாளரும், பாமகவின் முதல் மத்திய அமைச்சருமான தலீத், எழில்மலை என்பதை அச்சிலையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு காட்டியது.


 

 

அம்பேத்கரின் சிலைக்கு அன்புமணி மரியாதை செய்த உடன், நன்றி தெரிவித்தார் இளைஞர் பின்னர் அந்த இளைஞரின் நன்றியை ஏற்றுக்கொண்ட அன்புமணி, அங்கிருந்த மக்களை சந்தித்துவிட்டு விடைபெற்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஆனதிலிருந்து அன்புமணி பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  அந்தவகையில் திருவள்ளூரில்  சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது.