தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகாலமாக பிரதான கட்சிகளாக திமுகவும், அதிமுகவும் திகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக தொடங்கிய பிறகு முதன்முதலாக இடைத்தேர்தலைத்தான் சந்தித்தது.




திண்டுக்கல் தொகுதியின் வேட்பாளராக மாயத்தேவர் களமிறங்கினார். 1973ம் ஆண்டு அ.தி.மு.க. போட்டியிட்ட இடைத்தேர்தலில் முதன்முதலாக இதேநாளில் வெற்றியைத் தழுவியது. இதை அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நினைவு கூர்ந்துள்ளார்.






அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மே 21, 1973. அ.தி.மு.க.வின் முதல் வெற்றி. ஒரு சம்பவம் என்பது நேற்று. அது சரித்திரம் என்பது இன்று. அது சாதனை ஆவது நாளை. வரும் சோதனைதான் இடைவேளை. வரலாறாக மாறிய வாலியின் வரிகள்” என்று பதிவிட்டு திண்டுக்கல் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் 2 லட்சத்து 60 ஆயிரத்து 824 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அ.தி.மு.க. தனது முதல் வெற்றியை பெற்று சரியாக 50 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.




அந்த தேர்தல் வெற்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்தடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எம்.ஜீ.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்பின்னர், ஜெயலலிதா தலைமையிலும் அ.தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு நெடுஞ்செழியன் தலைமையிலும், ஜெயலலிதா சிறை சென்றபோதும், அவரது மறைவிற்கும் பிறகும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : அரசுப்பள்ளி மாணவர்களுக்கு Spoken English பயிற்சி: ஆசிரியர்களை அடையாளம் காண தேர்வு


மேலும் படிக்க : உயிரிழந்த பட்டியலின பெண்.. அடக்கம் செய்ய இடமின்றி ஓடையோரம் எரிக்கப்பட்ட சோகம்.. என்ன நடந்தது?