AIADMK: ஈபிஎஸ் vs செங்கோட்டையன்! வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!
அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வில் புகைச்சலை கிளப்பியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே பனிப்போர் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ’’எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை’’ என இருவரும் பொது வெளியில் மறுத்தாலும், மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்து வருவது இருவருக்கும் இடையே புகைச்சல் இருப்பதை உறுதி செய்துள்ளது.
அதிமுகவில் நடக்கும் பனிப்போர்:
அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வில் புகைச்சலை கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட நிகழ்ச்சி பேனரில் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என எடப்பாடிக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்ததும் அதற்கு அதிமுக தலைவர்கள் செல்லூர் ராஜு உட்பட சிலர் பதில் கருத்து தெரிவித்ததும் என சர்ச்சை தொடங்கியது.
அதன்பின் ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக நிர்வாகிகளை அழைத்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, எஸ்பி வேலுமணி மகன் திருமண விழாவில் அண்ணாமலையுடன் நெருக்கம் காட்டியது என அவர்மீதான ப்ளாக்மார்க் அதிகமானது.
இந்நிலையில் செங்கோட்டையன் கட்சிக்குள்ளேயே தனது ஆதரவாளர்களை திரட்டி அரசியல் செய்து வருவதாகவும் முனுமுனுக்கப்பட்டு வருகிறது. எனினும் செய்தியாளர் சந்திப்பின் போது எடப்பாடி மீது அதிருப்தியா என கேட்கப்பட்ட கேள்விக்கு அப்படி எதுவும் இல்லை என தெரிவித்தார். ஈபிஎஸ் உம் தங்கள் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை எனவே கூறி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்திலும் செங்கோட்டையன் நேரில் பங்கேற்காமல் காணொலி வாயிலாக கலந்துகொண்டது விமர்சனத்திற்குள்ளானது.
இதையும் படிங்க: சசிகலா TTV அடுத்தடுத்து சந்திப்பு! டார்கெட் அதிமுக! எடப்பாடிக்கு செக்?
கூட்டத்தில் மறைமுக தாக்கு:
மேலும் அந்த கூட்டத்தில் செங்கோட்டையன் எதுவுமே பேசவில்லை எனவும் கூறப்படுகிறது. அதனால் டென்ஷனான பழனிச்சாமி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர்களுக்கும் பேசாதவர்களுக்கும் நன்றி என குத்திக்காட்டியதாகவும் தகவல் வெளியானது. இப்படி சலசலப்புகள் தொடர எஸ்பி வேலுமணி மகன் திருமண விழாவில் ஈபிஎஸ் பங்கேற்கவில்லை ஆனால் செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: PTR on Annamalai: அண்ணாமலை கேட்ட கேள்வி.. புரளியை கிளப்ப வேண்டாம்.. பதிலடி கொடுத்த அமைச்சர் பி.டி.ஆர்
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஈபிஎஸ் பங்கேற்றார். ஆனால் ஈபிஎஸ் வருவதற்குள் செங்கோட்டையன் அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு அப்ஸ்காண்ட் ஆகிவிட்டார். இப்படி ஈபிஎஸை செங்கோட்டையன் புறக்கணித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. கலகத்திற்கு பெயர்போன அதிமுகவில் அடுத்த கலகத்திற்கு ஈபிஎஸ் ரெடியாகி விட்டாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.