தருமபுாி மாவட்டம் அரூா் அடுத்த கோபிநாதம்பட்டி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராமா் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கோபுரத்தின் கலசத்தில் புனிதநீரை ஊற்றி வழிபாடு செய்தாா். தொடர்ந்து பொதமக்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் கோபுர காலத்திற்கு ஹெலிகாப்டரிலிருந்து பூ தூவப்பட்டது.
இதனை தொடர்ந்து பாப்பிரெட்டிபட்டி அடுத்த எச்.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அதிமுக கட்சி கொடியை ஏற்றினார். தொடர்ந்து எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் ஜெயலலிதா தெரிவதுபோல் அதிமுக 100 ஆண்டு காலம் அதற்கு மேலும் சிறப்பாக செயல்படும். ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுக ஆட்சி ஓரிரு வாரங்களில் கலைந்துவிடும் ஓரிரு மாதங்களில் கலைந்துவிடும் என்று தற்போதைய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தெரிவித்து வந்தார். ஆனால் கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் ஒத்துழைப்போடு நான்காண்டு முழுவதும் சிறப்பான ஆட்சியை வழங்கினோம். திமுக தற்போது ஏதோ சந்தடி சாக்கில் ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எந்த விதமான புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் தற்போது ஸ்டாலின் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். நான் போட்ட திட்டங்களுக்கு தான் அடிக்கல் நாட்டு கொண்டிருக்கிறார். அனைவரும் கூறுவது போல் ஸ்டிக்கர் ஓட்டுகின்ற வேலையைத்தான் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். அதிமுக ஆட்சியில் கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் நகரங்களுக்கு இணையான திட்டங்களை கிராமங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தியது. தரமான சாலைகள் அமைக்க திட்டம் வேளாண் பெருமக்கள் பயன்படும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இத்திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள், தடுப்பணைகள் கட்டும் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் தற்போது வரை நிறைவேற்றவில்லை.
இல்லம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்வி கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்து அதற்கு பல்வேறு புதிய விதிமுறைகளை வகுத்து நாற்பத்தி எட்டு லட்சம் பேர் ஸ்டாலின் வாக்குறுதியை நம்பி ஐந்து சவரன் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து அந்தப் பணத்தை செலவு செய்துவிட்டு தற்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள். தற்போது 13 லட்சம் பேருக்குதான் நகை கடன் தள்ளுபடி என்று கூறுகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே பொதுமக்களுக்கு துணை நிற்கும். அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் புதிய அரசு கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அனைத்திலும் முதல் இடம் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு லஞ்சத்தில் மட்டும் தான் முதலிடத்தில் உள்ளது” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏக்கள் வே.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்