அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் நவம்பர் 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கான திட்டமிடல், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்