அதிமுக தொண்டர்கள்தான் பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றால், அனைத்துக்கும் தொண்டர்களிடம்தான் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துக்கும் தொண்டர்களிடம் செல்வது என்பது சிரமமான காரியம் என்பதால் பொதுக்குழுவுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம் வைத்து வருகிறது.
மேலும் பதவிகளை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு எனவும் இபிஎஸ் தரப்பு வாதம் வைத்து வருகிறது.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம்தான் பொதுக்குழு மற்றும் உறுப்பினர்கள் என்றும் பொதுக்குழு எடுக்கும் முடிவை தொண்டர்கள் எடுக்கும் முடிவாகத்தான் பார்க்க வேண்டும் என்றும் இபிஎஸ் தரப்பு வாதம்
மேலும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கியபோது, தொண்டர்களிடம் செல்லாத ஓ.பன்னீர்செல்வம், தற்போது செல்ல வேண்டும் என கூறுகிறார் என்றும் இபிஎஸ் தரப்பு வாதம் வைத்து வருகிறது.
இதற்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனது வாதங்களை வைத்திருந்தது.