உச்சநீதிமன்ற தீர்ப்பு


அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக  வெளியாகியுள்ளது. கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். 


இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கினார். இதில் முதலில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்மூலம் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பால் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகி இருக்கிறது. 





”கவுரவர்களின் சூழ்ச்சி தோல்வடைந்துள்ளது"


இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ” உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் கவுரவர்களின் சூழ்ச்சி தோல்வடைந்துள்ளது; பாண்டவர்களான எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.  உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, மகிழ்ச்சியான தீர்ப்பு” என்றார்.


மேலும் அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்காலம் பூஜ்யமாக இருக்கும். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் இவர்களை தவிர யார் அதிமுகவுக்கு வந்தாலும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.  ஓ.பன்னீர்செல்வத்தை ஒருபோதும் அதிமுகவில் ஏற்க முடியாது. ஓபிஎஸ் தலைமையிலான குழு என்பது அட்டக்கத்தி. இவர் நியமித்த நிர்வாகிகள் கூட எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வார்கள். தமிழ்நாட்டில் இனி அதிமுக தான் இருக்கும். அது எடப்படி பழனிசாமி தலைமையில் தான் இருக்கும்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 





"மீண்டும் முதல்வர் ஆவார் இபிஎஸ்”


அதே போல, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ”உச்சநீதிமன்ற தீர்ப்பு தெய்வ வாக்கு எனவும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம் தன் ஈபிஎஸ் என்று தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் தீர்ப்பால் இபிஎஸ் மீண்டும் முதலமைச்சர் ஆவார். அதிமுக தொண்டர்கள் இபிஎஸ் பக்கம் தான் உள்ளனர். நியாயமான தீர்ப்பு தான் வந்துள்ளது” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க


AIADMK: “கலங்கி போயிருந்தேன்; இரவு தூங்கல; எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது” - தீர்ப்புக்கு பின் இபிஎஸ் சரவெடி பேச்சு


AIADMK: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்; இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்தான்.. அதிமுக பொதுக்குழு செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு