அதானி-ஹிண்டேபர்க் விவகாரத்தில் ஜேபிசி (joint parliamentary committee probe) விசாரணைக்கு கோரிக்கை விடுத்து, மக்களுக்காக குரல் எழுப்பய உறுப்பினர்களை அனுமதிக்காத நாடாளுமன்றத்தை மத்திய அரசு "ரப்பர் ஸ்டாம்ப்" ஆக்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.


இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் முழு அமர்வில் உரையாற்றிய கார்கே மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.  ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற மக்களை வலியுறுத்தினார். இதைச் செய்யாவிட்டால் "சர்வாதிகாரம் வந்து அனைவரையும் அழித்துவிடும்" என்று கூறினார்.“அரசு பாராளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் எங்கள் கருத்துகளை கூற முயன்றால், அதற்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. எங்கள் எம்.பி.க்களுக்கு நோட்டீசுகள் வழங்கப்பட்டுள்ளது. பெண் எம்.பி. ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


அதானி விவகாரத்தில் அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததற்கும், மக்கள் பிரச்சணை எழுப்பியதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். அதானியின் சொத்து மதிப்பு ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்ததுள்ளது.  அதானி குழுமத்திற்கு எதிரான முறைகேடுகள் குறித்த அமெரிக்காவை தளமாகக் கொண்ட குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் மீதான கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த கருத்துக்கள் நீக்கப்பட்டது.


SBI மற்றும் LIC போன்ற சில பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அதானி குழும நிறுவனங்களின் பங்கின் தொடர் சரிவை விசாரிக்க ஒரு ஜேபிசி அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்ததால், இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி ரஜனி பட்டீல், சபை நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளின் அங்கீகரிக்கப்படாத வீடியோவைப் வெளியிட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் மீண்டும் மீண்டும் சபையில் நுழைந்து, முழக்கங்களை எழுப்பிய காரணத்தால், சிறப்புரிமையை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நாடாளுமன்றக் குழுவை விசாரணை மேற்கொள்ள தன்கர் கேட்டுக் கொண்டார். 


கட்சிகள் தொடர்ந்து ஜேபிசி விசாரணை கோரி வருவதால் ஐஎன்டியுசி ஒரு இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால், அதானி குறித்த கேள்விகள் நீக்கப்பட்டன என்று கார்கே கூறினார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் எப்போதும் பெரிய தொழிலதிபர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகவும், தொழிலாளர்கள் ஒருபோதும் அதில் அங்கம் வகிக்கவில்லை என்றும் கார்கே குற்றம் சாட்டினார். "முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்க தொழிலாளர்கள் இயக்கம் வலுப்பெற்றபோது, ​​அவர்கள் தொழிலாளர்களை எதிர்க்கவும் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் INTUC க்கு எதிராக அமைப்பை உருவாக்கினர்.


இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பைப் பாராட்டிய காங்கிரஸ் தலைவர், HMT, BHEL, ஸ்டீல் ஆலைகள், IITகள், IIM, AIIMகள் மற்றும் ISRO போன்ற முக்கிய நிறுவனங்களை உருவாக்கியது யார்? நாங்கள் தான், நாங்கள் போலி அல்ல. பல லட்சம் ஊழியர்கள் அதில் பணியாற்றி வருகிறார்கள்” என குறிப்பிட்டார்.  ”குறைந்தபட்ச ஊதியச் சட்டம், ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் (ஒழிப்பு) சட்டம் ஆகியவை காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டன. மோடி-(அமித்)ஷாவால் எத்தனை சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.  2014க்குப் பிறகு, மோடி அரசாங்கத்தால் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது, க்ரோனி முதலாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன”, என்றார்.


 30 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதும், மக்களுக்கு வளமான வாழ்வை வழங்குவதும் உங்கள் அரசின் கடமை என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். மேலும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.