அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.  சிறுபான்மையினரான அன்வராஜா, நிலோபர் கபில் போன்றோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இசுலாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற தொடர் குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் தமிழ் மகன் உசேனை அதிமுக நியமித்துள்ளது.


 






மதுசூதனன் மறைவை தொடர்ந்து அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவரான தமிழ் மகன் உசேனுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார்கள். அதிமுக அவைத் தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்படுபவரை அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டியாது விதிமுறையாகும். இனி செயற்குழு, பொதுக்குழுவை கூட்டம் அதிகாரம் அவைத் தலைவருக்கு மட்டுமே இருக்கும். கட்சிக்கு பொதுச்செயலாளரோ அல்லது இப்போது இருக்கும் ஒருங்கிணைப்பாளர்களோ செயல்படமுடியாத நிலையில் உள்ளபோது கட்சியின் தலைவராக இருந்து அறிவிப்புகளை வெளியிடக்கூடிய அதிகாரம் அவைத் தலைவருக்கு உண்டு


தற்காலிக அவைத் தலைவர் என குறிப்பிட காரணம், பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்பதற்காக தான். மற்றபடி அவர் அவைத் தலைவர் தான். பொதுக்குழு ஒப்புதல் பெறும் அவரை தற்காலிக அவைத் தலைவர் என குறிப்பிடுவார்கள். ஆனால், அவர் தான் அவைத் தலைவர். பொதுக்குழு ஒப்புதல் சம்பிரதாயம் தான்.


 






யார் இந்த தமிழ் மகன் உசேன்?


எம்ஜிஆர் மன்ற செயலாளரான தமிழ் மகன் உசேன் அதிமுக ஆட்சியில் வக்ஃபுவாரிய தலைவராக இருந்தார். கன்னியாகுமரியைச் சேர்ந்த தமிழ் மகன் உசேன், அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியே முதல் கட்சியில் இருந்து வருகிறார். அவர் எம்பி பதவி கோரிய நிலையில், தற்போது அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அவைத்தலைவர் போட்டியில் செம்மலை, செங்கோட்டையன், பொன்னையன் ஆகியோர் இருந்தனர். இதில், செம்மலை, பொன்னையன் ஆகியோர் முன்னணியில் இருந்த நிலையில், தமிழ் மகன் உசேனுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண