சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்த இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விஜய் மக்கள் இயத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள்.


மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 14.12.2023 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.


வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத்துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்:


வடசென்னை மாவட்டம்


1. வார்டு -46


முகவரி: முல்லை நகர், அசோக் பில்லர், அரசு உயர் நிலை பள்ளி அருகில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி


2. வார்டு - 45


முகவரி: P.B. ரோடு, கரிமேடு, வியாசார்பாடி, தீயனைப்பு நிலையம் அருகில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி


3. வார்டு- 35


முகவரி: கொடுங்கையூர், முத்தமிழ் நகர், பள்ளிவாசல்அருகில். பெரம்பூர் சட்டமன்ற தொகுதி


4. வார்டு - 72


முகவரி: 9, கஸ்தூரிபாய் காலனி A பிளாக், கண்ணிகாபுரம், மக்கள் மறுமலர்ச்சி மன்றம் அருகில் திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதி


5. வார்டு- 75


முகவரி: சுப்புராயம் 4-வது தெரு, திரு.வி.க.நகர் தொகுதி


6. வார்டு - 65


முகவரி: முத்துமாரியம்மன் கோவில் தெரு, MGR நகர், SBI அருகில் கொளத்தூர் தொகுதி


7. வார்டு - 41


முகவரி: கருமாரியம்மன் தெரு, தூய இருதய மெட்ரிகுலேஷன் பள்ளி அருகில், கொருக்கு பேட்டை, R.K.நகர் தொகுதி


தென்சென்னை மாவட்டம்


8. வட்டம்-141


முகவரி: காமராஜ் காலனி, (தி.நகர் பேருந்து நிலையம் அருகில்), தி.நகர் தொகுதி


9. வார்டு - 133


முகவரி: ஆனந்தன் தெரு, (முப்பத்தம்மா கோவில் அருகில்), தி.நகர் தொகுதி


10. வட்டம் - 134 


முகவரி: ஐந்து விளக்கு, (புண்ணியகோடி கல்யாண மண்டபம்), தி.நகர் தொகுதி


11. வட்டம்-134


முகவரி: பிருந்தாவனத் தெரு, ஹவுசிங் போர்டு அருகில், தி.நகர் தொகுதி


12. வட்டம் - 130


முகவரி: அம்மன் கோயில் தெரு, கிழக்கு (வடபழனி முருகன் கோயில் அருகில்), தி.நகர் தொகுதி


13. வட்டம் - 135


முகவரி: 83 வது தெரு மேல் புதூர், (அசோக் நகர்), தி.நகர் தொகுதி


14. வட்டம் -131


முகவரி: 61வது தெரு (அம்மா உணவகம் அருகில்), நல்லாங்குப்பம், தி. நகர் தொகுதி


15. வட்டம் -180


முகவரி: திருவான்மியூர் ECR சாலை, RTO ஆபீஸ் அருகில், வேளச்சேரி சட்டமன்ற தொகுதி


 16. வட்டம்-178


முகவரி: தரமணி, தந்தை பெரியார் நகர், தரமணி பேருந்து நிலையம் அருகில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி


17. வட்டம் -121


முகவரி: கணேசபுரம் அருகில், சிட்டி சென்டர் பின்புறம், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி


18. வட்டம்-123


முகவரி: லாக்நகர், மந்தவெளி RTO ஆபீஸ் அருகில், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி


19. வட்டம் -139


முகவரி: பாரதிதாசன் காலனி ஜாஃபர்கான் பேட்டை அருகில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி


20. வட்டம்-140


சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி


21. வார்டு-120


முத்தையா தோட்டம் அருகில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி


மத்திய சென்னை மாவட்டம்


22. வார்டு- 58, வார்டு-99, வார்டு - 77


முகவரி - ஐயப்ப மைதானம், திரு நாராயண குரு சாலை, பெரியமேடு, சூலை, சென்னை டவுட்டன் பாலம் அருகில், எழும்பூர் சட்டமன்ற தொகுதி


23. வார்டு -108


முகவரி-எம்.எஸ்.நகர், அம்பேத்கர் திடல் மங்களபுரம் போலீஸ் பூத் அருகில். எழும்பூர் சட்டமன்ற தொகுதி


24. வார்டு- 95, வார்டு - 84


முகவரி- திரு வெங்கடய்யா முதல் தெரு, வில்லிவாக்கம், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி


25. வார்டு - 98


முகவரி- குட்டியப்பன் தெரு, பம்பிங் ஸ்டேஷன், அயனாவரம் மனநிலை காப்பகம் அருகில் அயனாவரம், கீழ்ப்பாக்கம் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி” ஆகிய சட்டமன்ற தொகுதிகள் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.