ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) குடியேறிய காஷ்மீர் பண்டிட் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் இரண்டு மசோதாக்களை ராஜ்யசபா இன்று அதாவது டிசம்பர் 11ஆம் தேதி நிறைவேற்றியது.  ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 ஆகிய இரண்டு மசோதாக்களும் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.


பறிக்க முடியாது:


ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, "முன்பு ஜம்முவில் 37 சட்டமன்ற இடங்கள் இருந்தன, இப்போது புதிய தொகுதி மறுவரையறை ஆணையத்திற்குப் பிறகு, 43 சட்டமன்ற இடங்கள் உள்ளன, முன்பு காஷ்மீரில்  46 சட்டமன்ற இடங்கள் இருந்தன, இப்போது 47 சட்டமன்ற இடங்கள் உள்ளன" என்று கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரும் எங்களுடையது என்பதால், அதற்கு 24 சட்டமன்ற இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதை எங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.


மசோதாக்களில் ஒன்று ஜம்மு மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம், 2004ஐ திருத்த முயல்கிறது. அதில் பட்டியலின சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கு பணி நியமனங்கள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் சேர்க்கை ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக இயற்றப்பட்டுள்ளது.  மற்றைய மசோதா ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019ஐத் திருத்த முயல்கிறது. 


மசோதா:


முன்மொழியப்பட்ட மசோதா மொத்த சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது மற்றும் ஏழு இடங்களை பட்டியலிடப்பட்ட சாதியினருக்கும், ஒன்பது இடங்களை பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்குகிறது.


ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 இல் புதிய பிரிவுகள் 15A மற்றும் 15B ஐ இணைக்க முயல்கிறது, அதில் இரண்டு உறுப்பினர்களுக்கு மிகாமல், அவர்களில் ஒருவர் "காஷ்மீரில் குடியேறியவர்கள்" சமூகத்திலிருந்து ஒரு பெண் மற்றும் "இடம்பெயர்ந்த நபர்களிடமிருந்து ஒரு உறுப்பினர்" தேர்வு செய்யப்படவேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்” என்று ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு உட்பட்டதாகவே இருக்கும் எனவும் அந்த திருத்த மசோதாக்கள் குறிப்பிடுகின்றது.