தமிழகம் முழுவதும் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதையடுத்து, சென்னை, வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட திருவான்மியூர் குப்பம் கடற்கரை சாலையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வருகை தந்து முதல் ஆளாக வாக்கு செலுத்தினார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சரியாக காலை 7.15 மணியளவில் ரஜினிகாந்த் தனது வாக்கை செலுத்தினார். ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளராக உள்ள நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களிக்க வருவதையடுத்து அந்த பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., மக்கள் நீதிமய்யம். அ.ம.மு.க. நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.