இந்தியாவில் கல்வி, தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு போனற துறைகளில் வளர்ச்சிக்கு மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக தென் தமிழகம் திகழ்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு பல துறைகளில் நாட்டின் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
ABP Southern Rising Summit 2025:
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. இந்த தென்னிந்திய மாநிலங்களின் பாரம்பரியம், பண்பாடு, சமூக நல்லிணக்கத்தை பாராட்டும் விதமாக நமது ஏபிபி குழுமம் சார்பில் ABP Southern Rising Summit 2025 நடக்கிறது.
எப்போது?
இந்த நிகழ்ச்சியில் இன்று (நவம்பர் 25) செவ்வாய்கிழமை சென்னையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில், வணிகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும், வல்லுனர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். ஒருநாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் மட்டுமின்றி, அன்பில் மகேஷ், அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், கோவை சத்யன் உள்பட பிரபல அரசியல் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசுகின்றனர்.
நிகழ்ச்சி நிரல்:
நிகழ்ச்சி நிரல் அட்டவணை: (காலை முதல் மாலை வரை)
10.15 - 11.00 - உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வர்
11.00 - 11.30 - அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வி அமைச்சர்
11.30 - 12.00 - கவிதா, தெலங்கானா முன்னாள் எம்எல்சி
12.00 -12.30: சேலம் தரணிதரன் ( திமுக தேசிய செய்தித்தொடர்பாளர்) , கோவை சத்யன் ( அதிமுக செய்தித்தொடர்பாளர்), எஸ்ஜி சூர்யா ( தமிழக பாஜக இளைஞரணித் தலைவர்), பென்னட் அந்தோணி ராஜ் ( தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்) ஆகியோர் அடங்கிய அமர்வு
1.30 - 2.00: பேரா.காமகோடி, சென்னை ஐஐடி
2.00 - 2.30: நடிகை மாளவிகா மோகனன்
2.30 - 3.00: பங்கஜ் பெல்வாரியர், எஸ்.ஆர்.எம். இயக்குனர், ஆந்திரா, கெளரி சங்கர், பதிவாளர், விக்னன் பல்கலைக்கழகம்
3.00 - 3.30: அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்
3.30 - 4.00: அண்ணாமலை, தமிழக பாஜக முன்னாள் தலைவர்
4.00 - 4.30: பிரதிஷ் வேதப்புடி, விஜிஎன் பில்டர்ஸ் மேலாண் இயக்குனர், விமேஷ், ஜி ஸ்கொயர் ப்ராபர்டிஸ் சிஎம்ஓ
5.00 - 5.30: கவிதா கிருஷ்ணமூர்த்தி, பாடகி
5.30 -6.00: கே.டி.ராமராவ், தெலங்கானா எம்எல்ஏ
6.00 - 6.30: ஸ்ரதா ஜெயின் - ஸ்டாண்ட் அப் காமெடியன்
6.30 - 7.00: வல்லூர் கிரந்தி, மேலாண் இயக்குனர், சுற்றுலா துறை
7.00 - 7.30: நாதனா மேரி, கிரேன் ஆபரேட்டர், கேரளா. ரஜிதா, கிரேன் ஆபரேட்டர்
இந்த நிகழ்ச்சியில் அரசியல் நிபுணர்கள், சாதனையாளர்கள், தொழில்முனைவோர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை பகிர உள்ளனர்.
தலைவர்களும், தலைப்புகளும்:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு முன்மாதிரி மாநிலத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வளர்ச்சி மற்றும் சமத்துவம் என்ற தலைப்பில் பேசுகிறார். கல்வியின் உரிமை முக்கியத்துவம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகிறார். எஸ்ஐஆர் பற்றிய அமர்வில் சேலம் தரணிதரன், கோவை சத்யன், எஸ்ஜி சூர்யா, பென்னட் அந்தோணி ராஜ் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் பேசுகிறார். சகிப்புத்தன்மை குறித்து அண்ணாமலை பேசுகிறார்.