பாஜகவில் இருந்து நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செம்மலை, ”அரசியலில் இது ஒன்றும் புதிதல்ல. பிஜேபியில் இருந்து மட்டும்தான் அதிமுகவிற்கு இணைகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. பல அரசியல் கட்சிகளில் இருந்து, அதில் பணியாற்றி வருபவர்கள் அவரவர் விருப்பத்திற்கு பிடித்த இயக்கத்தில் சேர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எங்களது இயக்கத்தில் இருந்து கூட திமுகவில் பலர் இணைந்துள்ளனர், பிஜேபியில் இணைந்து இருக்கிறார்கள். எப்போதுமே பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள், இந்த கட்சியினரின் கொள்கை, நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால் தங்களுக்குப் பிடித்த அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்வார்கள். ஆண்டு கொண்டிருக்கும் ஒரு தேசிய கட்சியில் இருந்து, எங்களது இயக்கத்தை நாடி வருவது எங்கள் இயக்கத்தின் மீது உள்ள நம்பிக்கை என்று எடுத்துக் கொள்ளலாம். வந்தவர்களை அரவணைப்பது எங்களது கட்சி தலைமையின் கடமை. யாரையும் நாங்கள் வழியன பிற கட்சியிலிருந்து இருப்பதோ, வற்புறுத்தி இயக்கத்திற்கு அழைப்பது இல்லை அவர்களாக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற கட்சியை தேர்வு செய்கின்றார்கள்.



அதிமுக கூட்டணி தர்மத்தை மீறுகிறதா? 


பாஜக-அதிமுக கூட்டணி என்று எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதிகாரப்பூர்வமாக பிஜேபியும்  அதிமுகவும் சென்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்தது. ஆனால் அதன் பிறகு வந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்றோம். எனவே கூட்டணி தொடர்கிறது என வைத்துக் கொள்ளக் கூடாது. கூட்டணி என்றாலே அந்தந்த கட்சியில் இருந்து ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும். பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கிறது என்பது சரியல்ல. அவ்வப்போது ஒரு பிளவு ஏற்படுகிறது. தொடர்ந்து கூட்டணியில் இருக்கிறோம் கூட்டணி தர்மத்தை மீறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கூட்டணி தர்மத்தை மீறுவது போன்று நாங்கள் எதுவும் செய்யவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட பாஜக ஆதரவளித்தது. தேர்தலின் போது வாக்குகள் எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். இதனால் அதிமுக கூட்டணி தர்மத்தையும் மீறுகிறது என்று சொல்வது தவறு” என்றார்.



பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா கருணாநிதியை போன்று நானும் ஒரு தலைவன் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர். அவர் பிஜேபியின் தலைவர் அல்ல. ஒரு கட்சியின் தலைவர் என்றால் கட்சியின் நிறுவன தலைவராக இருக்க வேண்டும் அல்லது நிறுவன தலைவருக்கு பின்னர் அந்தக் கட்சியினை தலைமை ஏற்று நடத்த வேண்டும். பிஜேபியை பொருத்தவரை அது ஒரு தேசிய கட்சி அதற்கு நட்டா தலைவராக உள்ளார். அவருக்கு பின்னர் பிரதமர் மோடி கூட தலைவராகலாம். அது தேசிய கட்சி என்பதால் தேசிய தலைவர்கள் என கூறிக் கொள்ளலாம். ஆனால் அண்ணாமலை, தன்னை எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற தலைவர்களோடு ஒப்பிடுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது சரியான ஒப்பிடும் அல்ல என்று கூறினார்.


தூத்துக்குடியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த செம்மலை, புகைப்படம் எரித்தது ஒரு இழிவான செயல். எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. எங்களது தலைமை பொறுத்தவரை நாங்கள் யாரையும் எதிரியாகவோ, விரோதியாகவோ பார்க்கவில்லை. ஆனால் இதுவரை அந்த கட்சி அதன் தலைமை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களின் நிலைப்பாடு தெரிந்த பிறகு எங்களது கருத்தை சொல்ல முடியும் என்று கூறினார்.