ஆவின் பால் நிறுவனத்திலே குழந்தை தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கியதை விட, தவறு வேற எதுவும் கிடையாது, சட்டத்திற்கு புறம்பானது, அரசு இதை மறைப்பது மிகப் பெரிய தவறு என காஞ்சிபுரத்தில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார்.
திருமண வரவேற்பு விழா
காஞ்சிபுரம் ( Kanchipuram ) : முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும் தமாகா நிர்வாகிகளில் ஒருவருமான தென்னேரி பாபு நாயுடு அவர்களின் இல்ல திருமண விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பு விழாவில் தமாகா தலைவர் ஜி கே வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி. கே.வாசன், “ஆவின் பால் நிறுவனத்திலே குழந்தை தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கியதை விட, தவறு வேற எதுவும் கிடையாது, சட்டத்திற்கு புறம்பானது, அரசு இதை மறைப்பது மிகப் பெரிய தவறு.
திருமண வரவேற்பு விழா
வரும் நாட்களிலே எத்துறையிலும் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது, அரசின் உடைய கடமையாக இருக்கிறது என்பதை நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதில் உண்மை நிலையை தொடர்ந்து அரசு மறைக்க நினைப்பது ஏற்புடையது அல்ல, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அதிலே மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
தமிழகம், தேசிய அளவிலே விளையாட்டில் பங்கேற்க கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டியது தமிழகத்தினுடைய விளையாட்டு துறையின் உடைய கடமையாக இருக்கிறது. இந்த பணிகளை அவர்கள் வரும் நாட்களிலேயே சரிவர செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்