சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். சேலம் கோட்டை மைதானத்தில் முன்னாள்  அமைச்சர் செம்மலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



 


அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயரவில்லை


கூட்டத்தில் கண்டன உரையாற்றிய முன்னாள் அமைச்சர் செம்மலை, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ஒரு சிலவற்றை நிறைவேற்றியதாக அழகர்கள் கூறினாலும் அது அரைகுறையான குறைபிரசவம் போன்றது. தேர்தல் வாக்குறுதியில் சொன்தையும் செய்வோம், சொல்லாதததையும் செய்வோம் என்று கூறிய அவர்கள், தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததான டாஸ்மாக் மது விலையையும் சொத்து வரியையும் உயர்த்தி உள்ளனர். மதுவிலை உயர்வால் மது அருந்துபவர்களை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அவர்களின் குடும்பமும் பாதிக்கிறது. சொத்து வரி உயர்வால் வாடகை உயர்ந்து வாடகைதாரர்களும் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் வலியுறுத்தல்படிதான் இந்த வரியை உயர்தியதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் கூறுகிறார். மத்திய அரசு, மக்களுக்கு விரோதமாக எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதனை எதிர்போம் என ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது மத்திய அரசு வலியுறுத்தியதால்தான் வரியை உயர்த்தியதாக கூறுவது எந்தவகையில் நியாயம். 2018ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, 50 சதம் வரி உயர்த்தப்பட்டது. ஆனால் கொரோனா காலத்தில் அந்த வரிஉயர்வை ரத்து செய்து மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்பட்டோம்.


தற்போது உயர்த்தப்பட்ட சொத்து வரிக்கடுத்து குடிநீர் வரி, திடக்கழிவு மேலாண்மை வரி உயர உள்ளது. மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு வரி உயர்த்தப்பட்டது என்றார், நீட்டை நடைமுறைபடுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறினால் அதனை ஏற்றுக்கெள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். மின்வாரியத்தில் 1.6 லட்சம் கோடி கடன் உள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை அதிமுக எதிர்த்தது. மின்வாரிய திருத்த சட்டத்தின்படி, மின்கட்டனத்தை உயர்த்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி கடணம் உயர்த்தினால், ஒரு ரூபாய்க்கு 40 பைசா கட்டண உயர்வு ஏற்பட உள்ளது. போக்குவரத்து துறை 48 ஆயிரம் கோடி நட்டத்தில் உள்ளது, மத்திய அரசு வலியுறுத்தல்படி இதில் கட்டணம் உயர்த்தவேண்டும் என்றால் ஒரு கிலோமீட்டருக்கு 30 பைசா உயரும். அதிமுக கொண்டுவந்த திட்டங்களை எதிர்த்த ஸ்டாலின், அதிமுக காலத்தில் நிறுத்தி வைத்திருந்த திட்டங்களை நடைமுறைபடுத்தி அதற்கு மத்திய அரசின்மீது பழிபோடுகின்றனர். இதுதான் மக்கள் ஆட்சியா. மினி கிளினிக்கை மூடிவிட்டு வீடுதேடி மருத்துவம் என்பது, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மருத்துவரும், செவிலியர்களும் சென்று மருத்துவம் பார்பார்களா என்று கேள்வி எழுப்பியதுடன், இது கேலிக்கூத்தானது என்றார். தாலிக்கு தங்கம் திட்டத்தில் பட்டப்படிப்பு படித்த பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம், மற்றும் 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 90 ஆயிரம் மதிப்பிலான திட்டம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை நிறுத்திவிட்டு இப்போது உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ஆயிரம் தருவதாகவ கூறுகின்றனர். 3 ஆண்டுகளுக்கு 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்கின்றனர்.



பாலியல் புகாரில் சிக்கிய திமுகவினர்


அதிமுக ஆட்சியில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர்கள் மனசாட்சியுடன் பணியாற்றினார்கள். ஆனால் தற்போது எங்குபார்த்தாலும் நிலம் அபகரிப்பு, பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. விருதுநகரில் நடைபெற்ற பாலியல் சம்பவத்தில் திமுகவினர் சம்மந்தப்பட்டுள்ளனர். இதில் நடவடிக்கை எடுப்பதில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. திமுகவினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ள ஓட்டு போட்டவரை பிடித்து தந்த அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு. போக்குவத்து துறையில் உதவி ஆணையர் அறையில் 35 லட்சம் ரூபாய் லஞ்சம் பிடிபட்டது. அவர்மீது நடவடிக்கை இல்லை. அவருக்கு பணியிடமாறுதல் மட்டுமே வழங்கப்பட்டது. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்கட்சிக்கு ஒரு நீதி என்ற அடிப்படையில்தான் தற்போது உள்ள அரசு செயல்பட்டு வருகிறது.


வணிகவளாகம் கட்டுவது தொழிலா? வியாபாரமா?


துபாய் பயணத்தில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, 6100 கோடி முதலீடு ஈர்த்ததாக கூறுகின்றனர். இந்த ஒப்பந்தம் போட்டது லூலு கம்பெனி. இது கேரளாவை சேர்ந்த யூசுப்அலி என்பவரின் நிறுவனம். இவருடன் ஒப்பந்தம் போட ஏன் துபாய் செல்லவேண்டும். இந்த ஒப்பந்தத்தில் 3,500 கோடி முதலீடு வணிகவளாகம் கட்டுவது. இது தொழிலா, வியாபாரமா என்பதை தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெளிவுபடுத்த வேண்டும். இது வியாபாரமாக இருந்தால் இதன்மூலம் சிறு சிறு வியபாரிகள் பாதிக்கப்படுவார்கள். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தனது பங்கிற்கு குறைத்து விட்டது. தமிழக அரசோ மத்திய அரசு மீது பழிபோடுகிறது. கட்டுமான பொருட்கள் விலை மேலும் கடுமையாக உயரும். இதனை மக்கள் தாங்கமாட்டார்கள். அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. 10 ஆவது ஆண்டில்கூட மக்கள் அதிமுகவை வெறுக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் வெறுப்பை சம்பாதித்து விட்டனர் என்றார்.