ADMK Notice: ஓ.பி.எஸ்.க்கு அ.தி.மு.க. தலைமையகம் திடீர் வக்கீல் நோட்டீஸ்..! என்ன காரணம் தெரியுமா..?

ஓ.பி.எஸ்க்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Continues below advertisement

அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை முறைகேடாக பயன்படுத்துவதாக கூறி ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க. தலைமையகம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தகுந்த விளக்கம் அளிக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஓ.பி.எஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

கட்சிக்குள் தனது பலத்தை வலுப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர் செல்வம்,  “கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான், அது தான் இன்றும் ஒன்றரை கோடி தொண்டர்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.  அந்த தீர்மானத்தை ரத்து செய்ய மனம் இருந்தால் இந்த நாடு மன்னிக்காது. 

சோதனை காலத்தில் துணை நின்ற தொண்டர்களுக்கு நன்றி. கட்சியின் தொண்டனாக இருப்பதில் பெருமை என்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கி தந்தார். 

ஓபிஎஸ் என்கிற சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என்பதை இந்த கட்சி காட்டி இருக்கிறது. மனிதாபிமான அடிப்படைக்கூட இல்லாமல் சர்வாதிகார உச்சத்தில் எடப்பாடி இருக்கிறார். எடப்பாடிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்தட்டும் பார்க்கலாம். பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வந்தவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே என்ன பிரச்சினை என்பது அவர்களுக்கே தெரியும். அதிமுக வங்கி கணக்கில் வங்கி கணக்கில் முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது” எனத் தெரிவித்தார். 

கட்சியை கபாலிகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது, இன்றைக்கு என்ன நிலைமை? இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்வார்களாம், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவார்களாம்..என்ன ஒரு தைரியம்? சாதாரண தொண்டர் நினைத்தாலும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நிற்கலாம் என சட்டத்திருத்தம் செய்வார்களாம் . இந்த ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தும் சக்தி தான் தொண்டர்கள். எங்கள் உயிரே போனாலும் தலைமையை தேர்வு செய்யும் தொண்டர்கள் உரிமையை போக விட மாட்டோம்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாம் சொல்கிறோம், ஒற்றுமையாக இருக்க கூடாது என அவர் சொல்கிறார். 

தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குவேன் என எடப்பாடி சொல்லிப் பார்க்கட்டும், எங்கே போவார் என்றே தெரியாது என குறிப்பிட்டார். 

துணை முதலமைச்சர் பதவி டம்மி என்பதால், அதனை வேண்டாம் என்றேன், 4 ஆண்டுகள் முழுவதும் அனைத்து அதிகாரமும் தனது கைக்குள் வைத்திருந்தவர் எடப்பாடி, 4 ஆண்டுகள் நான் ஏமாற்றப்பட்டேன் என பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுப்பினார். மேலும் ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிறுவுவேன் என உறுதியளித்தார்.

இந்நிலையில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர்

உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருகிறார். 

கட்சியின் பொறுப்பு இபிஎஸ் வசம் இருப்பதால் ஓபிஎஸ் இது போன்று செயல்படுவது குறித்து சட்டவிளக்கம் (Legal notice) விடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola