அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
முன்னதாக நீதிமன்ற உத்தரவை மீறி நியமிக்கப்பட்ட அவைத் தலைவர் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மேல் முறையீடு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என ஈபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்தது.
இந்நிலையில் பழைய உத்தரவு பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை கோரி மேல் முறையீட்டு வழக்கில் கோரிக்கை வைக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட பழைய உத்தரவுகள் அனைத்தும் 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர மற்ற எந்தத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால்,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
தவிர, உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார்,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதை அவசர வழக்காக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரா் தரப்பில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் அமா்வு முன் வியாழக்கிழமை கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: "பணம் செலவு செய்தால் ஸ்டாலினையே அதிமுக பொதுச் செயலாளர் என்பார்கள்" - டிடிவி.தினகரன் சரவெடி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்