நெல்லை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை அமைக்கும் பணி கழிவு நீர் ஓடை பராமரிப்பு பணி உள்ளிட்டவைகளை தமிழக சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 62 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி பாதாள சாக்கடை பராமரிப்பு பணி, கழிவுநீர் ஓடை பராமரிப்பு பணி உள்ளிட்டவைகள் நடந்து வருகிறது. நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் தேரோட்டத்திற்கு முன்பாக சாலைகள் பராமரிக்கப்பட்டு தேர் எந்தவித பிரச்சனையும் இன்றி போடுவதற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 20 நாட்களுக்குள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளை சீரமைக்காவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிகக் குறைந்த அளவே பெய்துள்ள காரணத்தால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 சதவிகித்ததை விட குறைவாகவே பெய்துள்ளது. மானூர் குளம் மட்டுமின்றி விஜய நாராயணம் குளம், களக்காடு குளம்  கூட தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது. திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானுர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு செய்து விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து இருப்பதாகவும் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். திருமங்கலம் ஃபார்முலாவை காட்டிலும் 20 மடங்கு பணம் ஈரோடு கிழக்கு தொகுதியில் புழக்கத்தில் இருந்துள்ளது. வாக்காளர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படத்தை போட்டு காட்டி பணம் கொடுத்துள்ளனர்.


நாகலாந்து, மேகாலயா தேர்தல் மட்டுமல்ல வரும் அனைத்து தேர்தலும் பாஜகவிற்கு தான் ஆதரவாக அமையும் என தெரிவிந்தார். இதுவரை பாஜக எந்த எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியதில்லை எனவும் கட்சிகளில் இருக்கும் குரூப் பாலிடிக்ஸ் காரணமாக அவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டு வெளியே வருவதால் சில மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதாக தெரிவித்த அவர் தற்போது தமிழகத்தில் குரூப் பாலிடிக்ஸ் இல்லை இனி நடக்கலாம் என தெரிவித்தார். தமிழகத்தில் மருங்காபுரி மதுரை கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதே கிடையாது. ஆனால் அதிகமான பணபுழக்கம் இருந்ததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஆளும் கட்சி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண