சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், வேறு கட்சிக்கு மாறுவது, சுயேட்ச்சையாக போட்டியிடுவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுயேட்சையாக போட்டியிடும் கும்மிடிபூண்டி ஒன்றிய அதிமுக மகளிர் அணி செயலாளர் லட்சுமி மற்றும் நெல்லையைச் சேர்ந்த அதிமுக பேச்சாளர் முனைவர் சடகோபன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தனர். கட்சியினர் யாரும் அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.