தி.மு.க. கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தற்போது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பிரதான வாக்குறுதியாக நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதியை அளித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த ஓராண்டில் நீட் தேர்வு பிரச்சினை விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு எப்படி இருந்தது? என்று அரசியல் கட்சியினரிடம் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியது.
நீட் விலக்கு பெறுவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு ?
நல்ல ஒத்துழைப்பு ; நியாயமான நடவடிக்கை :
நீட் தேர்வு பிரச்சினை விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல ஒத்துழைப்பையும், நியாயமான நடவடிக்கையையும் எடுத்து வருகிறார் என்று தி.மு.க. கூட்டணியினர் 78.1 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 46.3 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 47.4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 64.3 சதவீதம் பேரும், நாம் தமிழர் 50 சதவீதம் பேரும், மற்றவர்கள் 57.1 சதவீதம் பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 65.2 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர்.
நல்ல ஒத்துழைப்பு இல்லை ; ஆனால், நியாயமான நடவடிக்கை :
நீட் தேர்வு பிரச்சினை விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றாக ஒத்துழைக்கவில்லை என்றும், ஆனாலும் அவர் நியாயமான நடவடிக்கையை எடுத்து வருகிறார் என்றும் தி.மு.க. கூட்டணியினர் 12.8 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 21.1 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 36.8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 14.3 சதவீதம் பேரும், நாம் தமிழர் 21.4 சதவீதம் பேரும், மற்றவர்கள் 14.3 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 18.2 சதவீதம் பேர் இந்த கருத்தை கூறியுள்ளனர்.
நல்ல ஒத்துழைப்பு இல்லை : நடவடிக்கைகள் நியாயமற்றவை :
நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், அவரது நடவடிக்கைகள் நியாயமாக இல்லை என்றும் தி.மு.க. கூட்டணியினர் 9.1 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 32.6 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 36.8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 14.3 சதவீதம் பேரும், நாம் தமிழர் 21.4 சதவீதம் பேரும், மற்றவர்கள் 14.3 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 18.1 சதவீதம் பேர் இதே கருத்தை கூறியுள்ளனர்.
முழு கருத்துக் கணிப்பு விவரம் :
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்