தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க. வெற்றி பெற்றபோது ஆளுநராக பொறுப்பு வகித்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு, ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


ஆளுநர் ஆர்.என்.ரவியின் பல்வேறு செயல்பாட்டிற்கு, தி.மு.க. அரசு கடும் அதிருப்தியை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்தநிலையில், ஓராண்டு திமுக ஆட்சிக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள்..? பிற கட்சி தொண்டர்கள் அளிக்க வாக்கு என்ன என்பது குறித்து ஏபிபி – சி வோட்டர் கருத்துக்களை கூறியுள்ளனர்.


முதல்வரின் ஒரு வருட திமுக ஆட்சிக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் ?



அமமுக தொண்டர்கள் அளித்த வாக்கு சதவீதம் என்ன..? 




திமுக பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் பொது மேடை கூட்டங்களில் தங்களது ஓராண்டு சாதனைகள் குறித்து விளக்கமளித்து வருகிறது. இந்தநிலையில், அமமுக தொண்டர்களிடம் ஓராண்டு திமுக ஆட்சிக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பினோம். அதற்கு அமமுக தொண்டர்கள் 5.4 மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர். 


அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் அளித்த வாக்கு சதவீதம் என்ன..? 




திமுக ஆட்சியமைத்தபோது சட்டசபையில் எதிர்க்கட்சியாக அதிமுக அமர்ந்தது. கடந்த மாதம் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக அதிக முறை வெளிநடப்பு செய்தது. இந்தநிலையில், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்களிடம் ஓராண்டு திமுக ஆட்சிக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பினோம். அதற்கு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் 4.6 மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர். 


முழு கருத்துக் கணிப்பு விவரம் :



மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் அளித்த வாக்கு சதவீதம் என்ன..? 




கடந்த சட்டபேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழ்நாடு முழுவதும் போட்டியிட்டு பெரும்பான்மையை இழந்தது. தற்போது மக்கள் நீதி மய்யத்தில் போதிய பணம் இல்லாமல் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்தநிலையில், மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தொண்டர்களிடம் ஓராண்டு திமுக ஆட்சிக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பினோம். அதற்கு மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தொண்டர்கள் 6.9 மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர். 


நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அளித்த வாக்கு சதவீதம் என்ன..? 




தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு சம்பவம் அல்லது இயற்கை அழிப்பு என்றால் சீமானின் நாம் தமிழர் கட்சி தொண்டர்களின் குரல் முதல் நபராய் இருக்கும் என்ற கருத்து பரவி வருகிறது. இந்தநிலையில், நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடம் ஓராண்டு திமுக ஆட்சிக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பினோம். அதற்கு நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் 6.2 மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர். 


திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் அளித்த வாக்கு சதவீதம் என்ன..? 




திமுக பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் பொது மேடை கூட்டங்களில் தங்களது ஓராண்டு சாதனைகள் குறித்து விளக்கமளித்து வந்தாலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் அளித்த வாக்கு சதவீதம் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தொண்டர்களிடையே குறைவாகவே உள்ளது. அதன்படி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்களிடம் ஓராண்டு திமுக ஆட்சிக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பினோம். அதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் 6.7 மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர். 


முக்கிய கட்சிகளிடம் எழுப்பிய கேள்விக்கு பிறகு தமிழ்நாட்டில் இருக்கும் பிற கட்சியான தேமுதிக, பாமக உள்பட பல்வேறு கட்சிகளிடம் திமுக ஆட்சிக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு 5.5 மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர். 


மொத்த சராசரி மதிப்பெண் என்ன..? 


திமுக ஆட்சிக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு அனைத்து கட்சிகள் அளித்த மதிப்பெண்கள் அடிப்படையில் சராசரி கணக்கிடப்பட்டது. அதன் அடிப்படையில், திமுகவிற்கு 10க்கு 5.9 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண