தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக சுமார் 31,500 கோடி ரூபாய் தொடர்பான திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பங்கேற்றார். அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். இதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் இது தொடர்பாக இன்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அதில், “நேற்று முதலமைச்சர் தன்னுடைய கட்சிக் கூட்டத்தில் பேசுவதை போல் பேசி வருகிறார். நேற்று பிரதமர் மோடி பெருந்தன்மையாக இவை எதையும் பொருட்படுத்தாமல் தமிழ் மக்களின் பெருமை தொடர்பாக பேசினார். மேலும் இன்று காலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்திருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜிஎஸ்டி நிலுவை தொகை தொடர்பாக நேற்று பேசியிருந்தார். ஜிஎஸ்டி கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சருக்கு தெரியுமா?” என்பது போன்ற சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.


 






மேலும் பேசிய அவர், “ஜூன் முதல் வாரத்தில் திமுக செய்த இரண்டு ஊழல்களாக பட்டியல் வெளியிட உள்ளோம். அதில் ஒவ்வொரு துறையிலும் இவர்களுடைய ஊழல் தொடர்பாக அடுத்த 15 நாட்களுக்குள் நாங்கள் புத்தகம் வெளியிடுவோம். திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 4ரூபாய் மற்றும் 5 ரூபாய் குறைப்பதாக தெரிவித்திருந்தது. அதை செய்ய வேண்டும் என்று தான் நாங்கள் கூறுகிறோம்.


 



கச்சத்தீவு தொடர்பாக தமிழ்நாட்டில் பேசுவதற்கு திமுகவிற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. அதைப்பற்றி நேற்று முதலமைச்சர் பேசினார். நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு குறைவு தான். ஏன்னென்றால் அந்த தேர்வு யாருக்கும் எதிராக இல்லை” எனத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அந்த விழா மேடையில் பேசியது தொடர்பாக பாஜகவினர் பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண