சமூக ஆர்வலர் பாரிஸ் ஹில்டன், பள்ளியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது பாலியல் தாக்குதல் செய்யப்பட்டதாகவும், அப்போது தனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


பரிசோதனை என்ற பெயரில் வன்கொடுமை


41 வயதான அவர், 2020 ஆம் ஆண்டில் உட்டாவில் உள்ள ப்ரோவோ கேன்யன் பள்ளியில் தனது பதின் பருவத்தில் நடந்த விஷயங்களை பகிர்ந்துகொண்டார். மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை வெளிப்படுத்தினார். பள்ளி வழக்கமாக கர்ப்பப்பை பரிசோதனைகளை நடத்தும் என்று குற்றம் சாட்டியுள்ளார். அது உண்மையில் பரிசோதனை இல்லை, பாலியல் தாக்குதல் என்றார். அது எந்த அளவுக்கு பயமாக இருக்கும் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் விவரித்துள்ளார்.






அறைக்குள் நடந்தது


"இரவு நேரத்திலும் அல்லது அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி வாக்கிலும் இந்த பரிசோதனைகள் இருக்கும், அவர்கள் என்னையும் மற்ற பெண்களையும் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்வார்கள். இதனை செய்பவர்கள் ஒரு மருத்துவர் கூட இல்லை. இரண்டு வெவ்வேறு பணியாளர்கள் தான் இருப்பார்கள். அங்கு அவர்கள் எங்களை மேசையில் படுக்க வைத்து, தங்கள் விரல்களை உள்ளே செலுத்துவார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் நிச்சயமாக ஒரு மருத்துவர் அல்ல என்பது எனக்கு தெரியும், அது மிகவும் பயமாக இருந்தது. இது நான் பல ஆண்டுகளாகத் எதிர்கொண்ட ஒன்று." என்றார்.


தொடர்புடைய செய்திகள்: Student Murder in Thomas Mount : ”இப்படித்தான் திட்டமிட்டு கொலை செய்தேன்” : மாணவி படுகொலை.. கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்...


அடிக்கடி ஞாபகம் வருகிறது


மேலும் அது மருத்துவ பரிசோதனை அல்ல, பாலியல் தாக்குதல் என்பதை தற்போது உணர்ந்ததாக குறிப்பிடுகிறார். அவர் தி நியூயார்க் டைம்ஸிடம் பேசுகையில், "அது இப்போது எல்லா நேரங்களிலும் எனக்கு நியாபகம் வருகிறது. நான் அதைப் பற்றி யோசிக்கிறேன். இப்போது, வயதான பிறகு திரும்பி பார்த்தால், அது நிச்சயமாக பாலியல் துஷ்பிரயோகம்தான்," என்றார்.






இவ்வளவு நாள் மறைத்துவிட்டேன்


தொடர்ச்சியான ட்வீட்களில் பாரிஸ் தனது அனுபவத்தை மேலும் விவரித்தார், அங்கு அவர் கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். ஒரு மேசையில் படுத்துக் கொண்டார் என்றும், அவர் அழும்போது எதிரே இருப்பவர் கால்களைத் திறக்கிறார் என்றும் அவர் இட்ட பதிவு பலர் நெஞ்சத்தை உலுக்கியது. மேலும் அந்த நேரத்தில் அதிகமாக மருந்து கொடுத்தார்கள், எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை என்று எழுதினார்.


அவர் அழுதபோது, 'வாயை மூடு. அமைதியாக இரு. வலுக்கோடுப்பதை நிறுத்து' என்று கூறி மிரட்டியதாக கூறினார். "இந்த வலிமிகுந்த தருணங்களைப் பற்றி மனம் திறந்து பேசுவது முக்கியம். இதன்மூலம் நான் குணமடைந்து இந்த துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன்", என்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதனை பொதுவெளியில் பேச துவங்கிய அவர், இவ்வளவு ஆண்டுகள் இதனை மூடி மறைத்ததாக கூறினார்.