ஓணம் பண்டிகையானது,கேரள மக்களுக்கு தவிர்க்கவே முடியாத மிகப்பெரிய திருவிழாவாகும். அறுவடை திருநாளை போற்றும் இந்நன்னாளில் கடவுள் விஷ்ணுவின், வாமன அவதாரத்தின்,பெருமைகளை புகழும் வண்ணமும்,வருடத்திற்கு ஒரு முறை, தங்கள் இல்லத்திற்கு வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் பொருட்டும், அதி அற்புதமான, ஓணம் திருநாளை, கேரள மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.


சத்யா எனப்படும் 26 வகைகளுக்கு மேற்பட்ட உணவுகளை தங்கள் வீட்டுக்கு வருகை தரும் மாமன்னர் மகாபலி சக்கரவர்த்திக்கு படையில் இடுகிறார்கள். இந்த நன்னாளில்,மக்கள் குறிப்பாக கேரள பெண்கள்,தங்களை  அதிஅற்புதமான பாரம்பரிய உடையில் அலங்கரித்துக் கொள்கிறார்கள்.
 இந்த திருவோணம் பண்டிகையின் போது, கேரள பெண்கள் அணியும், தனித்துவமான  வெள்ளை நிற புடவையில்,தங்க நிறத்திலான பார்டரில் மின்னும்,கசவு புடவைகளை அணிகிறார்கள். இதற்கு ஏற்றார் போல தங்க நகைகளையும் அணிந்து கொள்கிறார்கள். இப்படியான பாரம்பரிய உடையில் கேரள பெண்களை காணும் பொது,இது கடவுளின் தேசம் என்றும் தேவதைகள் பூமியில் உலா வருகிறார்கள் என்றும், நம்பத் தோன்றும்.


இதில் புடவையைப் பொறுத்தவரை, வெள்ளை நிறதிலான புடவையில் தங்க நிறத்திலான, பாடரை கொண்ட புடவைகளை, அணிகிறார்கள்.


நகைகளை பொறுத்தவரை ஏராளமான வடிவங்களில் வைத்திருக்கிறார்கள். இத்தகைய நகைகளே,அந்த புடவையோடு சேர்த்து,இவர்களை பூமியில் உலாவும் தேவதைகளைப் போல காண்பிக்கின்றன. இப்படிப்பட்ட நகைகள் என்னென்ன விதத்தில் இருக்கின்றன என்பதை பார்ப்போம்.


 


தங்க நாணய நகைகள்:


திருமணங்கள் மற்றும் பிற  கொண்டாட்டங்களின் பொது, பெரும்பாலான மக்கள் இதை அணிவதால்,இது பிரபலமானது. காயின் நகைகள் என்பது தங்க நகைகளின் தனித்துவமான வடிவமாகும்.இது தங்க நாணயங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தனித்து நிற்கிறது. செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமான, ஓணம் சமயத்திலும் தங்க நாணயங்கள் அணிவது கேரள மக்களின் பாரம்பரிய நடைமுறையாகும்.


 


மயில் மற்றும் மலர் வடிவ நகைகள்:


மயில் மற்றும் மலர் வடிவமைப்புகளுடன் கூடிய பாரம்பரிய நகைகளை, அதிலும் குறிப்பாக,தாமரைகள் மற்றும் மல்லிகை வடிவத்தில் அமையப்பெற்ற நகைகளை, திருவோணம் பண்டிகையின் போது கேரளா பெண்கள் அணிந்து ஒட்டுமொத்த அழகையும் மேலும் அழகாக்குகிறார்கள்.
தங்கம் அணிய வசதி இல்லாத கேரள மக்கள்,தங்க ஃபிலிக்ரீ வேலைகளுடன் கூடிய இலகுரக மற்றும் சமகால கவரிங் மற்றும்  பிளாஸ்டிக்கில், செயற்கை தங்க நிறமிகளை கொண்டு உருவாக்கப்பட்ட நகைகளையும், தங்களின் வசதிக்கு ஏற்றார் போல அணிகிறார்கள்.



முத்துக்கள் கொண்ட தங்க நகைகள்:


ஒரு நவநாகரீகமான, ஒரே வண்ணமுடைய தோற்றத்தைப் பராமரிக்கும் அதே வேளையில், ஓணம் அன்று தங்கள் தோற்றத்தை வேறுபடுத்திக் கொள்ள விரும்புவோருக்கு ஒரு அற்புதமான தேர்வு,முத்துக்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள். கேரள மக்களின்  பாரம்பரிய  தங்க நிற பார்டர்  அமையப்பெற்ற கசவு புடவைக்கு தங்கத்திலான  நகைகளை  அணிய  முடியாவிட்டாலும் கூட தங்கத்தில் முத்துக்களை பதித்து அணியும் கம்மல்கள் மூக்குத்திகள் மற்றும் ஆரம் போன்றவை  சுத்தமான தங்க நகைகளை காட்டிலும்,பாரம்பரிய கசவு சேலைக்கும் அதி அற்புதமாக பொருந்தி தேவதைகளுக்கு இறக்கை முளைக்க வைக்கிறது.