ஐபோன் யூசர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த நொடி இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிறது. 


‘ஃபார் அவுட்’ எனும் நிகழ்வில் ஆப்பிள் 14 சீரிஸைச் சேர்ந்த ஐபோன் 14 மேக்ஸ் , ஐபோன் 14ப்ரோ , ஐபோன் 14ப்ரோ மேக்ஸ் ஆகியவையோடு சேர்த்து ஆப்பிள் ஏர்பாட் , ஐபாட் , ஜவாட்ச் ஆகியவை இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்பட உள்ளன. இந்த ஐபோன் 14 சீரிசில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாற்றமாக அதன் டிஸ்பிளே வடிவமைப்பு அமைந்துள்ளது. 


இந்நிலையில், இந்தியாவில் ஐபோன் 13 மாடலின் விலை கிட்டத்தட்ட ₹10,000 ரூபாய் வரை குறைந்து விற்பனையாகி ஆப்பிள் பிராண்ட் பயனர்களின் மனதைக் குளிர்வித்துள்ளது.


ஐபோன் 14 விழா தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக விலை குறைந்துள்ள நிலையில், ஐபோன் 13 மாடல் 128 ஜிபி ₹69,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட் இரண்டு தளங்களுமே இந்தத் தள்ளுபடியை அறிவித்துள்ளன.


இதேபோல், ஐபோன் 13 இன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மாடல்களும் 10 ஆயிரம் குறைத்து தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.


இந்நிலையில், ஐபோன் 14 மாடல் அறிமுகத்தின் எதிரொலியாக இந்தத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.


 






ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தனது புதிய தொழில்நுட்ப படைப்புகளை வெளியிடுவது வழக்கம். அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஐபோன் புதிய மாடல்களையும் அதே நாளில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஐபோன் 13 வெளியான நிலையில் , இந்த ஆண்டு ஐபோன் 14 வெளியாகவுள்ளது.


கொரோனா காலக்கட்டத்தில் ஆப்பிள் தனது ஈவெண்டை யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்தது. அதே போல இந்த ஆண்டு நிகழ்ச்சியையும் ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் செய்ய திட்டமிட்டுருப்பதாக தெரிகிறது. முன்னதாக  Apple இன் iPhone 13 நிகழ்வு செப். 14, 2021 செவ்வாய் அன்று நடைபெற்றது, மேலும் ஃபோன்கள் செப்டம்பர் 24 விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.


நிகழ்ச்சியின் பொழுது பேஸிக் ஐபோன் 14 மாடல் மொபைல்போன், புதிய மற்றும் பெரிய திரைக்கொண்ட ஐபோன் 14 மாடல் மொபைல்போன், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என்னும் விதங்களில் அறிமுகமாகவுள்ளதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.ப்ரோ ஃபோன்கள் சில ஃப்ளாஷியர் மேம்பாடுகளைப் பெறலாம் என கூறப்படுகிறது.


ஏனென்றால் முன்னதாக வெளியான தகவலின் அடிப்படையில் அந்த மாடல் மொபைல்போன்கள்  pill-shaped hole-punch cutout ஐ கொண்டுள்ளன. ஐபோன் 14 ஆனது $100 விலை உயர்வுடன் வரும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 க்கு இடையில் விலை மாற்றங்கள் எதுவும் இல்லை, ஆனால் ஆப்பிளின் விநியோக சங்கிலியில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதால்தான் இந்த விலை உயர்வு என கூறப்படுகிறது. இது தவிர இவ்வகை மாடல்கள் அடுத்த தலைமுறை ஏ-சீரிஸ் செயலியைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மொபைல்போன்கள் தவிர ஆப்பிள் தனது புதிய வாட்ச் மாடல்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது.higher-end rugged model SE ஸ்மார்ட் ஆப்பிள் வாட்ச் இந்த நிகழ்வின் பொழுது அறிமுகமாகும். முன்னதாக ஆப்பிள் தனது ஒயர்லெஸ் தொழில்நுட்ப ஏர்பட்ஸின் அடுத்த தலைமுறையில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில் , வரவிருக்கும் அறிமுக நிகழ்ச்சியில் அதுவும் வெளியாகலாம். இது தவிர ஐபேட் , மேக் கணினி உள்ளிட்ட அதன் அனைத்து முக்கிய பிராண்டுகளின் புதிய படைப்புகளும் வெளியாகும்