சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட செவிலியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


ஏழு ஆண்டுகளாக தற்காலிகப் பணி


தமிழ்நாட்டில் மருத்துவத் தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015ஆம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக, ஏறக்குறைய 5,000க்கும் அதிகமான செவிலியர்கள் தற்காலிக ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.


அதில் 2,000க்கும் மேற்பட்ட நபர்கள் கடந்த ஆண்டு மே மாதம் பணி நியமனம் செய்யப்பட்டனர். தவிர 3000க்கும் மேற்பட்ட நபர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக தற்காலிக செவிலியர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.


மேலும் படிக்க: Watch Video: ‛உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு?’ ஆய்வுக்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை அனுமதிக்க மறுத்த தீட்சிதர்கள்!


காலவரையறை அற்ற போராட்டம்


இந்த நிலையில், கரோனா உள்ளிட்ட அனைத்து பேரிடர் காலங்களிலும் தொடர்ச்சியாக பணியாற்றியும், 2015ஆம் ஆண்டு முதல் அரசு நடத்தக்கூடிய தேர்வுகளில் வெற்றிபெற்று தொகுப்பூதியத்தில் பணியாற்றியும் வரும்  தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி  தமிழ்நாடு முழுவதும் காலவரையறையற்ற போராட்டத்தை செவிலியர்கள் அறிவித்தனர்.


அதன்படி, இன்று (ஜூன்.07) தங்கள் முதற்கட்ட போராட்டத்தை செவிலியர்கள் தொடங்கிய நிலையில், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  இந்நிலையில், திடீரென 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கைது


இதனை அடுத்து தகவல் அறிந்த அங்கு வந்த காவல் துறையினர் செவிலியர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது பலன் அளிக்காத நிலையில், செவிலியர்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் சென்னை, அண்ணா சாலையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துறையினர் செவிலியர்களை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். 


மேலும் படிக்க: YouTube: 'FIR கேட்பதே தவறு, யூடியூப் கூட குற்றவாளிதான்' - அவதூறு வீடியோ குறித்து அதிரடியாக பேசிய கோர்ட்!


பாஜக நிர்வாகிகளால் இலட்சக்கணக்கான இந்தியர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகும் - நுபுர் ஷர்மா விவகாரத்தில் விசிக அறிக்கை


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண