’நாட்டின் மதிப்பைக் குலைக்கும் செயல்.. கன்னியாஸ்திரிகளை அவமதித்ததற்கு கேரள முதல்வர் கண்டனம்..

நேர்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

Continues below advertisement

உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி நகரில், மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியதுடன், கன்னியாஸ்திரிகளைத் துன்புறுத்தி பாதியிலேயே ரயிலில் இருந்து இறக்கிவிட்ட பஜ்ரங் தள் அமைப்பினரின் செயலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

கன்னியாஸ்திரிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி அவமானப்படுத்திய விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இதுபோன்ற சம்பவங்கள் உலக அளவில் இந்திய நாட்டின் மதிப்பைக் குலைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார் கேரள முதல்வர்.

Harassment of nuns in UP is shocking. Indian citizens' fundamental rights have been violated. @BajrangdalOrg & @Uppolice have tarnished India's image and our ancient tradition of religious tolerance. Wrote to @HMOIndia requesting intervention, so that authorities take action. pic.twitter.com/H9IMAupesd
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) March 24, 2021

இந்த விவகாரத்தைக் குறித்த நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கன்னியாஸ்திரிகள் விவகாரத்தில் நேர்மையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். பஜ்ரங் தள் அமைப்பினர் கொடுத்த புகாரில் முகாந்திரம் இல்லை என கூறி அந்தப் பெண்களை காவல்துறையினர் விடுவித்து பாதுகாப்பாக ஒடிசாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கன்னியாஸ்திரிகள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு, கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இச்செயலில் ஈடுபட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Continues below advertisement