அமீர் கானுக்கு கொரோனா..

கடந்த சில நாட்களில் என்னை சந்தித்த அனைவரும் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் அமீர் கான்.

Continues below advertisement

கொரோனா பரவல் மறுபடியும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து இந்தியாவும் பெருந்தொற்றின் இருளில் வதைபடுகிறது. பாலிவுட் உலகில் தனது தனித்துவமான நடிப்பிற்காக பாராட்டப்படும் நடிகர் அமீர் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.   

Continues below advertisement

முன்னதாக, 2018-ஆம் ஆண்டு வெளியான "Thugs of Hindostan" என்ற படத்தில் தோன்றிய அவர் தற்போது வெளியீட்டுக்காக காத்திருக்கும் இரு படங்களில் நடித்துள்ளார். கடந்த மார்ச் 14-ஆம் தேதி தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் அன்றோடு தனது சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களும் டெலீட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.    


இந்நிலையில் தனது செய்தித்தொடர்பாளர் மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், ’எனக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நான் நலமுடன் இருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னை சந்தித்த அனைவரும் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுஙகள். எனக்காக பிரார்த்திக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றி" என்று தெரிவித்துள்ளார். 

Continues below advertisement