எண்பது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட்டவர்கள் இன்று வாக்கு செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தபால் ஓட்டுகளுக்கு விண்ணப்பித்தோர் இன்று முதல் வாக்கு செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. 


அதன்படி 70 பேர் கொண்ட குழு 7,300 தபால் ஓட்டுகளை வீடுகளுக்கே சென்று பெற உள்ளனர். ஒருவர் ஒரு நாளைக்கு 15 நபர்களிடன் தபால் ஓட்டுகளைப் பெற உள்ளதாகவும், ரகசியம் காக்கப்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், முழு கவச உடையணிந்து அழைத்துச்சென்று வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.