மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று சொல்ல முடியாது, எய்ம்ஸ் செங்கல் என்றுதான் சொல்ல வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களுடைய சூறாவளி பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர். அதேபோல ராமநாதபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின்போது பேசிய அவர், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று சொல்லமுடியாது, எய்ம்ஸ் செங்கல் என்றுதான் சொல்ல வேண்டும். மு.க ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று பாராட்டப்பட்டவன் இந்த ஸ்டாலின். குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரித்ததால்தான் நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டம் வெற்றிபெற்று சட்டமாக மாறியுள்ளது.

பாஜக சொல்வதற்கெல்லாம் தலையாட்டி, தமிழ்நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம் செய்தவர் பழனிசாமி.

நடுங்கி, நம் உரிமைகளையெல்லாம் தன் டெல்லி எஜமானர்களின் காலடியில் சமர்ப்பித்த இவரே தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக மோசமான முதலமைச்சர்.

தேர்தலின் முடிவில் விடியல் பிறக்கும்! pic.twitter.com/gRYvF5tlcQ
— M.K.Stalin (@mkstalin) March 22, 2021

”இன்று தேர்தலுக்காக அதை மாற்றி பேசிவருகிறது அதிமுக. கொள்ளையடித்துவிட்டு சிறைக்கு போகவில்லை. அவசரநிலையின்போது, ஜனநாயகத்தை காக்க அரசியல் கைதியாக சிறையில் ஒராண்டு இருந்தேன்" என்று தெரிவித்தார்.
மேலும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "பாஜக சொல்வதற்கெல்லாம் தலையாட்டி, தமிழ்நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம் செய்தவர் பழனிசாமி. நடுங்கி, நம் உரிமைகளையெல்லாம் தன் டெல்லி எஜமானர்களின் காலடியில் சமர்ப்பித்த இவரே தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக மோசமான முதலமைச்சர். தேர்தலின் முடிவில் விடியல் பிறக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.