அரக்கோணம் இரட்டைக்கொலை தொடர்பாக காணொளி வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை என்று தெரிவித்தார்.  


அன்புமணியின் இந்த கருத்துக்கு சமூக  ஊடகங்களில் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


 


பழனிவேல் தியாகராஜன் : 


படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை- அன்புமணி ராமதாஸ்


நான் பழனிவேல் தியாகராஜன் B. Tech (Hons) (Chemical Engg), MS (Operations Research), MBA (Finance), PhD (Engg Psychology) படித்திருக்கிறேன்


நான் தொல். திருமாவளவன்  வுடன் நிற்கிறேன்


 


செந்தில்குமார் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர்: 


நான் டாக்டர் செந்தில் குமார்,
ஒரு கதிரியக்க சிகிச்சை நிபுணர் 


திமுக பாராளுமன்ற உறுப்பினர் 
தர்மபுரியில் டாக்டர் அன்புமனிக்கு எதிராக போட்டியிட்டவர்.


டாக்டர் தொல்.திரமாவளவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது


 KRS | கரச: 


தமிழ்நாட்டுக்கு, இன்றைய சூழலில்
முனைவர்  திருமாவளவன்  அவர்கள்
காலத்தினான் கிட்டிய வரம் & உரம்!


திராவிட இயக்க ஆழங்கால் வரலாறு
திமுக தலைவர்களைக் காட்டிலும்
இன்னும் ஆழ ஆய்ந்துள்ளவர் திருமா!


தொல். திருமாவளவன் அவர்களால்
தமிழும் சமூகநீதியும் பொலிவுறும்!
பொலிக! பொலிக! வாழ்க! வெல்க!


ஆர். விக்ரமன்:   


என் தலைவர் டாக்டர் திருமாவளவன் !
பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம். அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்பில் distinction தேர்ச்சி. இதழியல் முதுகலை படிப்பில் distinction தேர்ச்சி. என் தலைவர் டாக்டர் திருமாவளவன் என்பதை பெருமையுடன் சொல்வேன்.


nadika நாடியா:


நான் நாடிகா.  எம்.ஏ . பட்டம் பெற்றுள்ளேன். பிஎச்டி படிக்க வேண்டும் என்ற நோக்கில் உள்ளேன்.   


எனது மனம், இதயம், ஆன்மா திருமாவளன் வுடன் உள்ளது.  


எழுத்தாளர் மீனா கந்தசாமி : 


நான் மீனா கந்தசாமி, PhD


தங்கை- இளந்தென்றல், PhD


அம்மா- வசந்தா கந்தசாமி, PhD


அப்பா- கருப்பையா கந்தசாமி, PhD


எங்க தலைவர் திருமா. நாங்கள் அவரை முழுமையாக நம்புகிறோம்.


பாலபாரதி சிபிஎம்:     


படிக்காதவர்கள் மட்டுமல்ல
சாதியற்றவர்கள் நாதியற்றவர்கள் எல்லோரும் திருமாவோடுதான்.


 


நன்றி தெரிவித்த திருமாவளவன்:  


'நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம்' என சமூகவலைத் தளங்களில் பேராதரவு நல்கிய  கல்வியாற் சிறந்த பெருமக்கள்  யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.
 
மனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த கல்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி.


படித்தவர்கள் படிக்காதவர்கள் என மக்களைப் பாகுபடுத்தி உயர்வுதாழ்வு காண்பது சனாதனப் புத்தியின் விளைச்சலாகும். 


படிக்காதவர்கள் என்னும் சொல்லாடல் ஆணவத்தின் வெளிப்பாடாகும். அவர்கள் கல்விபெற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் அல்லது வாய்ப்பை இழந்தவர்கள்.


அதனால் அவர்கள் இழிவானவர்கள் அல்ல 


என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.