ம்உநடிகர் விவேக்கின் மறைவுக்கு இசையமைப்பாளர் தீனா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் “ரெண்டு விஷயத்துல விவேகமாக வாழ்க்கைய நடத்தியவர். இரண்டு ஆண்டுகளாக நிறைய பேச வாய்ப்பு கிடைத்தது. சமீபமாக பியானோ கற்றுக் கொண்டிருந்தார். அதில் ஒவ்வொரு கட்டமாக முடித்தது நேரடியாகவோ, ஸ்டூடியோ வந்தோ என்னை சந்தித்தால் அதனை கேட்க சொல்வார், சரியாக இருக்கா என கேட்பார். போனில் அனுப்பி எனக்கு சொல்லிக் கொடு என்பார். இசையோடு வாழக் கூடிய அருமையான மனிதர்” என்றார்




மேலும் பேசிய அவர் “இந்த சமயத்தில் அவர் மறைந்தது ஏற்க முடியாத விஷயம். இதை ஏன் கடவுள் கொடுத்தார், அவருக்கு ஏன் இந்த நிலை, மக்களை சிரிக்க மட்டுமே வைத்த கலைஞனுக்கு இந்த நிலையா மிகவும் வருத்தமாக விஷயம், அவரது குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வது , ஒரு வாரம் முன்பு கூட பேசினாரா ? அவரது மறைவை எப்படி நான் ஏற்றுக் கொள்வேன்”  எனவும் கூறினார்


நடிகரி விவேக்கின் மறைவுக்கு நடிகர் சூரி, சூர்யா, சார்லி உள்ளிட்ட பலரும் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தியதோடு தங்களது இரங்கலை தெரிவித்தனர். பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு மற்று அதை தொடர்ந்து ஏற்பட்ட மரணத்தை அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என அவரது நண்பர்கள் கூறினர்


முன்னதாக, நகைச்சுவர் நடிகர் விவேக் சென்னை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி காலை 4.35 மணிக்கு காலமானார். நடிகர் விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்கும்போது திடீர் என மயங்கி விழுந்ததால், சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருகம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் விவேக்கின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தனது நண்பனான விவேக்கின் மரணத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவை எனத் தெரிவித்த மயில்சாமி, மாலை 5 மணிக்கு நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்.


கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கவே தனியார் மருத்துவமனையைத் தவிர்த்துவிட்டு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி போட்டுக்கொண்டால் கோவிட்-19 தொற்று ஏற்படலாம். ஆனால், அந்தத் தொற்று உயிரைக் கொல்லாமல் இருக்கத் தடுப்பூசி உதவும்" என்று தெரிவித்ததோடு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது