சீர்காழி அருகே நான்கு வழிசாலையில் இருசக்கர வாகனமும் கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


அதிகரிக்கும் சாலை விபத்துகள் 


நாடுமுழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தேசிய சாலை பாதுகாப்பு குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தாலும் விபத்துகளின் எண்ணிக்கை என்பது சிறிதும் குறைந்தபாடில்லை. 




விபத்துக்கான முக்கிய காரணிகள் 


அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில் அதிவேகமாக செல்வது, வாகனங்களுக்கு இடையில் முறையான தொலைவு இடைவெளி இல்லாமல் செல்வது மற்றும் டிரைவிங்கின் போது உடல்நல கோளாறுகளால் ஏற்படும் அசவுகரியம் அல்லது கவனக்குறைவு, போதையில் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவது, சோர்வு, தலைகவசம் அணியாமல் செல்வது, மோட்டார் வாகன விதிமுறைகளை சிறிதளவு மதிக்காமல் செல்வது உள்ளிட்டவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் எதிர் பாதையில் நுழையும் போது, கார் சிக்னல்களை சரியாக பயன்படுத்தாமல் அல்லது வேறு வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் சாலை நிலைமைகளும் விபத்துக்களுக்கு காரணமாகின்றன.




நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நான்கு வழி புறவழி சாலையில் கோவில்பத்து என்னும் இடத்தில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அண்டக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் 60 வயதான செல்வராஜ் மற்றும் 65 வயதான தக்ஷிணாமூர்த்தி.


Seeman: "தம்பி வேறு! கொள்கை வேறு! எதிரிதான்" விஜய்க்கு எதிராக கொதித்தெழுந்த சீமான்!


திருமண பத்திரிக்கை வைக்க வந்தவர்கள் 


உறவினர்கள் ஆன இருவரும் தங்கள் வீட்டு திருமண நிகழ்விற்காக சீர்காழி அருகே உள்ள பாதரகுடி கிராமத்தில் வசிக்கும் தங்க உறவினர் வீட்டிற்கு பத்திரிகை வைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கோவில் பத்து என்ற இடம் அருகே வந்த போது சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி வந்த காருடன் எதிர்பாரத விதமாக அவரது இருசக்கர வாகனம் மோதியுள்ளது.




தூக்கி வீசப்பட்ட இருவர் 


இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த தஷ்ணாமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.


தீபாவளிக்கு கோயிலுக்கு சென்ற குடும்பம்.. வீட்டை மொட்டை அடித்த கொள்ளையர்கள் - நடந்தது என்ன ?




காவல்துறையினர் விசாரணை 


இந்த விபத்து குறித்து தகவல்கள் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீர்காழி காவல்துறையினர் விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்த ஆரணி நெசல் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரத்குமாரை என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க வந்த இருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.