மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு படை வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர்.


படையெடுக்கும் பாம்புகள் 


பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷத்தன்மை, இதனால் பலரும் பாம்பு கடித்து உயிரை இழக்கும் சம்பவம் காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வுகளில் ஒன்று. உலகம் தோன்றிய நாள் முதல் பரிணாம வளர்ச்சியும் படிப்படியாக காடுகள் அழிக்கப்பட்டு மனித வாழ்விடம் அமைப்பதற்காக கட்டிடங்கள் உருவாகி காடுகளின் அளவு குறைய தொடங்கியது. இதன் காரணமாக காடுகளில் வாழ்ந்த ஜீவராசிகள் அவர்களின் வழி தடம் தேடி நகர தொடங்குகின்றன. அவ்வாறு விலங்குகள் தங்கள் வாழ்விடத்தை இழந்த அவர்கள் வாழ்ந்த வழி தடங்களில் செல்ல தொடங்குகின்றன. 




நாள்தோறும் நடைபெறும் சம்பவங்கள் 


அவ்வாறு அவர்கள் செல்லும் பாதைகளில் தற்போது மனிதர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டிடங்கள், தோட்டங்கள் என அதிகரித்ததன் விளைவாக விலங்குகளின் சீற்றத்திற்கு மனிதர்கள் ஆளாகும் சூழலை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அதற்கு உதாரணமாக யானைகளால் மனிதர்கள் தாக்கப்படுவதும், வாழை, கரும்பு போன்ற தோட்டங்களும், வயல்களும் சேதம் படுத்தும் நிகழ்வும், இதுபோன்று புலிகள் போன்ற விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படும் நிகழ்வும் நடந்தேறும் செய்திகளை நாம் அன்றாடம் செய்தி ஊடகங்கள் வழியை அறிந்து வருகிறோம்.


கலெக்டரிடம் மனு கொடுத்த ஐயப்ப சுவாமி ; எங்கே? ஏன்?




கொம்பேறி மூக்கன் பாம்பு


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாக கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்த சிறிய ஓட்டையின் வழியாக 4 அடி நீளம் கொண்ட கொடிய விஷ பாம்பான கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று உள்ளே புகுந்துள்ளது. அப்போது, நீதிபதி சுதா நீதிமன்ற பணியில் இருந்துள்ளார். பாம்பு உள்ளே நுழைவதை கண்ட அங்கிருந்த ஜூனியர் வழக்கறிஞர்கள் சத்தமிட்டுள்ளனர். அதனை கேட்டு உடனடியாக நீதிபதி சுதா தனது இருக்கையில் இருந்து கீழே இறங்கி சென்றார். அதனை அடுத்து நீதிமன்ற ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலையம் நீதிமன்றத்தை ஒட்டிய பகுதியிலேயே உள்ளதால் தகவல் தெரிந்த அடுத்து நிமிடத்தில் நீதிமன்றம் உள்ளே நுழைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் பத்து நிமிடங்களுக்கு உள்ளாகவே அந்த கொம்பேறி மூக்கன் பாம்பை ஸ்நேக் கேட்ச்சர் கருவியை கொண்டு பத்திரமாக பிடித்து, பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர். 


திடீரென பற்றி எரிந்த சிஎன்ஜி ஆட்டோ ; நூலிழையில் உயிர்தப்பிய ஓட்டுநர்...!




வயலும் வயல் சார்ந்த இடம்


இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நீதிமன்றத்துக்கு உள்ளேயே பாம்பு நுழைந்த சம்பவம் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டம் வயலும் வயல் சார்ந்த இடம் மற்றும் தற்போது மழை காலம் என்பதாலும் குடியிருப்பு, அலுவலகங்கள், கடைகள், வாகனங்கள் போன்ற இடங்களில் பாம்புகள் உள்ளே புகுவது இயல்பு என்றாலும், பாம்புகள் அதிகரிப்பால் நடமாடும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.