தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்த நன்றி தெரிவிக்கும் விழாவாகும். உழவர்கள் தமது உழைப்பிற்கும், தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழாவினை ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். பயிர்த்தொழில் செய்பவர்களின் வாழ்வின் உற்பத்தி சார்ந்த இந்த விழா மத உணர்வும், இன உணர்வும் கடந்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டின் வெளிப்பாடாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.


Pongal 2024: ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் வினோத திருவிழா - எங்கு தெரியுமா..?




பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதல் என மார்கழி கடைசி நாள் போகி பண்டிகையுடன் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கி, தை 1 -ம் தேதி சூரியனும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையும், அதற்கு மறுநாள் தை 2 -ம் தேதி உழவுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டு பொங்கலும், அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் என பொங்கல் விழாவை உலக முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் கொண்டாடி வருகின்றனர்.


TN Weather Update: "இனி வறண்ட வானிலைதான்! நீலகிரியில் உறை பனி" லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்




இந்நிலையில் இந்த மகிழ்ச்சியான தினத்தில் ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சோக நிகழ்வின் காரணமாக மூன்று தலைமுறைகளாக பொங்கல் பண்டிகையை பொங்கல் அன்று கொண்டாடுவது இல்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக வழக்கத்திற்கு மாறாக பொங்கல் பண்டிகையை தை 1ம் தேதிக்கு பதில் தை 2 -ம் தேதி கொண்டாடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநகரி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தை மாத பிறப்புக்கு முதல் நாள் ஏற்பட்ட கலவரம் காரணமாக அதனை ஒட்டி நடந்த நகை திருட்டு சம்பவம் தொடர்பாக ஒரு சமூகத்தைச் சேர்ந்த பலரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.


Ayalaan Box Office: 4 நாள்களில் இத்தனை கோடிகளா.. அயலான் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!




பொங்கல் பண்டிகை என்பதால் காவல்துறையினர் மனிதாபிமான அடிப்படையில் திருநகரி கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தினரின் ஜாமினோடு தை 2-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். அன்று முதல் அக்கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தை இரண்டாம் தேதியே பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர். தை 1-ம் தேதி பொங்கலிட்டால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதால் தை 2-ம் தேதியில் தொடர்ந்து பொங்கல் விழாவாக கடந்த மூன்று தலைமுறைகளாக கிராம மக்கள் கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தை மாதம் இரண்டாம் தேதியான இன்று திருநகரி கிராம மக்கள் குடும்பம் குடும்பமாக தங்கள் வீடுகளின் முன்பு மறைப்பு ஏற்படுத்தி விளக்கேற்றி பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையல் இட்டு மகிழ்ந்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.


Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி