மயிலாடுதுறை மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்த திருமணம் ஆன பத்து நாட்களே ஆன புதுமாப்பிள்ளையை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
நடைப்பயிற்சி செய்த பெண்ணிடம் செயின் பறிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து பட்டமங்கலம் பேச்சாவடி மேகனா பள்ளி சாலையை சேர்ந்த அன்பழகன் என்பவரது மனைவி 67 வயதான மலர்க்கொடி. இவர் கடந்த 19 -ஆம் தேதி காலை வீட்டின் அருகே சாலையில் நடை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார்.
Crime: 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த பேத்தியின் கணவர்!
அந்த அடையாளம் தெரியாத நபர் மலர்கொடியை கடந்து செல்லும் போது திடீரென அவர் எதிர்பார்த்திராத சமயத்தில் மலர்கொடி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளார். தொடர்ந்து மலர்கொடி கூச்சலிட அருகில் இருந்தவர்கள் ஒடிவந்து மலர்க்கொடியை மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அதனை அடுத்து இது தொடர்பாக மலர்கொடி மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
குற்றவாளி பிடிக்க தனிப்படை
மேலும் இது தொடர்பான குற்றவாளி கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சுமார் 100 -க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா ஆடுதுறை திருமஞ்சன வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் 22 வயதான விஜயபாலன் வழிபறி சம்பவத்தில் ஈடுபட்டதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.
பிடிபட்ட புதுமாப்பிள்ளை
பின்னர் விஜயபாலனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 9 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். மேலும் விஜயபாலன் கடந்த மார்ச் மாதம் செம்பனார்கோவில் காவல் சரக எல்லைக்கு உட்பட்ட கீழையூர் பகுதியில் 4 சவரன் தாலிசெயினை பறித்து சென்றதும் தெரியவந்தது. இன்ஜினியரிங் சிவில் பட்டதாரியான விஜயபாலன் ஆன்லைனில் 6 லட்சத்திற்குமேல் கடன் வாங்கி செலவு செய்து வந்த நிலையில், அந்த கடனை அடைப்பதற்காக பைக்கை ஒன்றை வாங்கி அதில் நம்பர் பிளேட் பொருத்தாமல் பயன்படுத்தி வழிபறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
10 தினங்களுக்கு முன்பு திருமணம்
இந்த சூழலில் கடந்த 10 நாட்களுக்குமுன் தான் காதலித்து வந்த பெண் ஒருவரை திருமணம் செய்த விஜயபாலன் கையில் காசில்லாததால்’ மயிலாடுதுறையில் வழிபறியில் ஈடுபட்டு, காதல் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த விஜயபாலனை தனிப்படை போலீசார் 2 நாட்களில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் தட்டி தூக்கியுள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட விஜயபாலனை மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி முன்னிலையில் தனிப்படை போலீசார் ஓப்படைத்தனர். இரண்டு நாட்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குற்றவாளியை திறம்பட கைது செய்த தனிப்படை போலீசாருக்கு டிஎஸ்பி திருப்பதி பாராட்டு தெரிவித்தார். பின்னர் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.