மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் அடுத்த மாதம் 16.05.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது;

மே 16 ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் அடுத்த மாதம் 16.05.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சென்னை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) கலந்து கொள்ள உள்ளார்.

Hindi Mandatory: இனி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம்; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதவர்கள் 

இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், இதுவரை தங்களது ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதவர்கள் மட்டும் தங்களது குறை தொடர்பான மனுக்களை இரட்டை பிரதிகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை 609 305 என்ற முகவரிக்கு தெளிவான கையெழுத்திலோ அல்லது தட்டச்சு செய்தோ அனுப்ப வேண்டும்.

மனுவில் இடம்பெற வேண்டியவைகள் 

1.பெயர், பதவி மற்றும் முகவரி 

 

2.ஓய்வு பெறும் போது பணிபுரிந்த அலுவலகம் 

 

3. ஓய்வு பெற்ற நாள் மற்றும் ஆண்டு 

 

4. ஓய்வூதியம் தொடர்பான குறைகள் விபரம் 

 

5. குறைகள் எந்த அலுவலகத்தில் அலுவலரிடத்தில் நிலுவை 

 

6. ஓய்வூதிய கொடுப்பாணை எண் 

 

7.கைபேசி எண் 

 

ஆகிய விவரங்களுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குட் பேட் அக்லி vs சச்சின்! அஜித்தா? விஜய்யா? மீண்டும் எகிறும் கூட்டம்! குஷியில் தியேட்டர் ஓனர்கள்!

குறிப்பிட்ட சில துறைகளுக்கு தனியாக மனு

ஓய்வூதியதாரர்கள் தங்களின் குறை தொடர்பான மனுக்களை வருகின்ற 29.04.2025 (செவ்வாய்கிழமை) க்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே மனு செய்து நிலுவையில் உள்ளவர்கள் இவ்வலுவலக கடித எண்ணை குறிப்பிட்டு கடிதம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், மின்சாரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் நூற்பாலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பாமல் தொடர்புடைய உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.