தரங்கம்பாடி அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நிறுவனங்களுக்கு நிகராக தனது ஊழியர்களுக்கு பரிவட்டம் கட்டி தங்க நாணயம், புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் வழங்கி விருந்து வைத்து கடை உரிமையாளர் உபசரித்துள்ளார்.
தீபாவளி போனஸ்
தீபாவளி என்றாலே ஊழியர்களுக்கு நினைவுக்கு வருவது போனஸ் தான். இந்த ஆண்டு நம் நிறுவனத்தில் தீபாவளி போனஸ் ஆக எவ்வளவு பணம் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் ஊழியர்கள் இடையே மிகுந்து காணப்படும். பல நிறுவனங்களில் போனஸ் என்பது ஒரு எட்டா கனியாகவே ஊழியர்களுக்கு இருந்து வருகிறது. ஆனால் ஒரு நிறுவனங்களில் அது எதிர்மறையாக செயல்பட்டு போனஸ் மட்டுமின்றி பரிசு பொருட்களையும் நிறுவனங்கள் அள்ளி வழங்கும்.
பரிசளிக்கும் பழக்கம்
அதுவும் கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி பரிசாக தங்கள் நிறுவனத்தில் நீண்ட ஆண்டுகள் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களின் பணியினை பாராட்டி ஊழியர்களின் உழைப்பால்தான் இந்த அளவுக்கு உயர்ந்து வந்தோம் என்பதை உணர்ந்து அவர்கள் மூலம் சம்பாதித்த பெருமானத்தை அவர்கள் மூலம் சம்பாதித்த பெரும் பணத்தில் சில பகுதியை அவர்களுக்கு திருப்பி கொடுக்கும் வண்ணம் தீபாவளி பரிசாக வீடு, கார், பைக், தங்க நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்தவற்றை வழங்கி வருகின்றனர்.
ஃபர்னிச்சர் கடை உரிமையாளர்
இது போன்ற பரிசுகளை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வழங்கி வந்ததே நாம் கேள்விப்பட்டு வந்த நிலையில், அதற்கு மாறாக ஒரு சிறிய கடை உரிமையாளர் தனது கடையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக தங்க நாணயங்களை பரிசாக வழங்கி அவர்களை மகிழ்வித்துள்ள சம்பவம் மயிலாடுதுறை அருகே நடந்தேறி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் சந்துரு என்பவர் ஃபர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகிறது. அவர் கடையில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
EPS AIADMK: ”விஜய் உடன் கூட்டணி” - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
தங்க நாணயம் பரிசு
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்களை கௌரவிக்க உரிமையாளர் சந்துரு முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்வில் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது ஊழியர்கள், பணியாளர்களுக்கு கடை உரிமையாளர் பரிவட்டம் கட்டி புத்தாடை, பட்டாசு, இனிப்புகளோடு தங்க நாணயம், ரொக்க பணம் உள்ளிட்டவைகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து கௌரவித்தார்.
அதனை பெற்றுக் கொண்ட பணியாளர்கள் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அனைவருக்கும் அசைவ உணவு விருந்தும் அளிக்கப்பட்டது. இவரின் இந்த செயல் பெரும் நிறுவனங்கள் போன்று சிறிய கடை என்றாலும் அதன் மூலம் கிடைத்த பலனை தனது ஊழியர்களுக்கு பகிர்ந்து வழங்கியது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.