சீர்காழியில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரை வரவேற்கும் விதமாக சிலம்ப சுற்றிய பள்ளி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சிறுபான்மையினர் மாற்று பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து ஏராளமானோர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்றாயிறத்திற்கும் மேற்பட்டோர் தங்களை எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இதற்கான இன்று காலை ரயில் மூலம் வைத்தீஸ்வரன் கோயில் வந்த எடப்பாடி பழனிச்சாமி முன்னதாக வைத்தீஸ்வரன் கோயில் சாமி தரிசனம் செய்தனர்.
அ.தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு:
அதனைத் தொடர்ந்து சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி இல்ல திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவிற்காக தென்பாதி இமையவர்மன் கார்டனில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது பாதியில் மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்திருந்த சார்ட் குதிரை வண்டியில் அமரவைத்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஊர்வலமாக அழைத்து வந்தார். அவருக்கு வழி நெடுகிலும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவரை வரவேற்கும் விதமாக செண்டை மேளம், சிலம்பு, பேண்ட் வாத்தியம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடலில் குளித்து உயிரிழப்பு:
இந்நிலையில், இந்த நிகழ்வில் சீர்காழி புளிச்சக்காடு பகுதியில் சிலம்பம் பயிற்சி கற்றுதரும் தினேஷ் என்பவரின் பள்ளி மாணவர்கள் அடங்கிய சிலம்ப குழுவினர், இன்று சீர்காழி வருகை தந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்பு சிலம்பம் சுற்றி வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் அந்த குழுவின் விழாவை முடித்து கொண்டு இன்று மதியம் சீர்காழியை அடுத்த கூழையார் கடற்கரை சென்று , அங்கு கடலில் குளித்து விளையாடி உள்ளனர்.
அப்போது சிலம்பாட்ட குழுவை சேர்ந்த சீர்காழி பாதரகுடி சுபம் நகரில் வசித்து வரும் பஜ்ருதீன் என்பவரின் அரசு உதவிபெறும் பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மகன் நிசாருதீன் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமுல்லைவாசல் கடலோர காவல்படை போலீசார் சிறுவனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Gangai Amaran: "இசையமைப்பாளர் தீனா ஒரு எச்சக்கல" லோக்கலாக இறங்கி திட்டிய கங்கை அமரன்
மேலும் இது தொடர்பாக புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரை வரவேற்கும் விதமாக சிலம்பம் சுற்றி பள்ளி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.