மயிலாடுதுறையில் நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமினை இளைஞர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது;
வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், யூனியன் கிளப் ஆகியோருடன் இணைந்து பிரம்மாண்டமான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் வருகின்ற 16.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மயிலாடுதுறையில் நடைபெறவுள்ளது.
25 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
இந்த வேலைவாய்ப்பு முகாமில், மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 500-க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்பத் தகுதியான இளைஞர்களைத் தேர்வு செய்யவுள்ளன.
இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா
யாருக்கெல்லாம் இந்த முகாம் கலந்துகொள்ளலாம்..?
- வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள்.
- கல்வித் தகுதி: 5-ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் 12-ஆம் வகுப்பு வரை, டிப்ளமோ முடித்தவர்கள், ஐடிஐ படித்தவர்கள், பி.இ. போன்ற அனைத்து பட்டதாரிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது திறமைக்கேற்ற வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
இந்த முகாமில் வேலைவாய்ப்பு மட்டுமல்ல, இன்னும் பல நன்மைகள்
- உங்களுக்குத் தேவையான திறன் பயிற்சிகள் பற்றிய விவரங்களை இலவசமாகப் பெறலாம்.
- சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறவர்களுக்கு அதற்கான வங்கிக் கடன் வசதிகள் பற்றிய ஆலோசனைகளையும் தகவல்களையும் பெறலாம்.
- அயல்நாட்டில் வேலை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
- அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு போட்டித் தேர்வுகள் பற்றிய முக்கியமான தகவல்களும் ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படும்.
முகாமில் கலந்துகொள்ளும்போது மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டியவை:
- முழுமையான சுய விவர அறிக்கை (Resume).
- அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள்.
- ஆதார் அட்டையின் நகல்.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
- முன் அனுபவம் ஏதும் இருந்தால், அதற்கான சான்றிதழ்களின் நகல்கள்.
மேலும், இந்த முகாமில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் தங்களது விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு, கீழ்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: 04364-299790 / 94990-55904 மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் துறைகளில் வேலை தேடும் திறமையான இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.